New Tata Nexon: டாடா மோட்டார்ஸ், 'கருட்' என்ற குறியீட்டுப் பெயரில் அடுத்த தலைமுறை நெக்ஸானை 2027-ல் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய மாடல், தற்போதைய கூபே போன்ற வடிவமைப்பிற்குப் பதிலாக, பாக்ஸியான மற்றும் நிமிர்ந்த தோற்றத்துடன் வரவிருக்கிறது. இதனால், பின்பக்க ஹெட்ரூம் மற்றும் பூட் இடவசதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் அடுத்த தலைமுறை நெக்ஸானை இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. ‘கருட்’ என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்படுவதாகக் கூறப்படும் இந்த புதிய மாடல், 2027-ல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய சோதனை வாகனங்களில் இருந்து, இது சாதாரண முகம் மாற்றமாக இல்லாமல் குறிப்பிடத்தக்க தலைமுறை மாற்றமாக இருக்கலாம். தற்போதைய நெக்ஸான் 2017-ல் அறிமுகமாகி 2020 மற்றும் 2023-ல் முக்கிய அப்டேட்களை பெற்ற நிலையில், அடுத்த மாடல் புதிய வடிவமைப்புடன் வர வாய்ப்புள்ளது.

பாக்ஸியான புதிய தோற்றம்

புதிய நெக்ஸானின் பக்கவாட்டு வடிவமைப்பில் மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. தற்போதைய மாதலின் கூபே போன்ற சரிவான ரூஃப்லைனுக்கு பதிலாக, சோதனை காரில் மேற்கூரை சற்று தட்டையாகவும், பின்பக்க அமைப்பு அதிகம் நிமிர்ந்ததாகவும் தெரிகிறது. சி-பில்லரும் தற்போதைய மாடலைக் காட்டிலும் நேராகவும் தடிமனாகவும் இருப்பதாக ஸ்பை படங்கள் காட்டுகின்றன. இதனால் பின்பக்க பயணிகளுக்கு கூடுதல் ஹெட்ரூம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கம்மி விலையில் 5 சீட்டர் கார்! 6 ஏர்பேக், 33.85 கிமீ மைலேஜ்.. விலை இவ்வளவு தானா

பின்பக்கம் எப்படி இருக்கும்?

புதிய மாதலின் பின்புறத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. டெயில்கேட் அதிகம் செங்குத்தாகத் தெரிகிறது. பின்பக்க விண்ட்ஸ்கிரீன் பெரியதாகவும், அதன் மேல் ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் ரியர் வைப்பர் இருப்பதும் சோதனை காரில் தெரிகிறது. பம்பர் மற்றும் இறுதி டெயில் லைட் வடிவமைப்பு இன்னும் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளதால், உற்பத்தி மாடலில் இவை மாற வாய்ப்பு உள்ளது. நேரான ரூஃப்லைன் மற்றும் செங்குத்தான டெயில்கேட் காரணமாக பூட் இடவசதியும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபியூயல் கேப்பிலும் மாற்றம்

சிறியதாகத் தெரிந்தாலும், ஃப்யூயல் ஃபில்லர் கேப்பின் இடமாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போதைய நெக்ஸானில் இது கதவு கைப்பிடிக்கு கீழே அமைந்துள்ள நிலையில், புதிய சோதனை காரில் பின்பக்க குவார்ட்டர் பேனலில், கிட்டத்தட்ட கதவு கைப்பிடிக்கு நேராக அமைந்துள்ளது. கேபினைப் பொறுத்தவரை சோதனை காரில் தற்போதைய ஸ்டீயரிங், இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கிளைமேட் கட்டுப்பாடுகள் போன்றவை காணப்பட்டாலும், சோதனை உபகரணங்கள் இருந்தால் இதையே இறுதி வடிவமைப்பாகக் கருத முடியாது.

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள்

பவர்டிரெயின் விவரங்கள் டாடா மோட்டார்ஸ் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தற்போதைய தகவல்களின்படி, பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் புதிய தலைமுறை நெக்ஸானிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெக்ஸான் இவிக்கும் அடுத்த தலைமுறை அப்டேட் கிடைக்கலாம். ஆனால் டீசல் இன்ஜினின் எதிர்காலம் குறித்து வேறுபட்ட தகவல்கள் வெளியாகி வருவதால், இறுதி முடிவை டாடா அறிவித்த பிறகே உறுதி செய்ய முடியும். புதிய நெக்ஸான் 2027-ல் அறிமுகமாகும் என தற்போதைய ஆட்டோமொபைல் தகவல்கள் தெரிவிக்கின்றன.