Second hand car buying tips : செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும் போது நடக்கும் ஓடோமீட்டர் மோசடியை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. காரின் தேய்மானம், சர்வீஸ் ரெக்கார்டுகள், டயர்களின் நிலை ஆகியவற்றை வைத்து உண்மையான பயன்பாட்டை அறியும் வழிகள் இதில் உள்ளன.
புதுசா ஒரு கார் வாங்கறதை விட, செகண்ட் ஹேண்ட்ல ஒரு நல்ல காரை குறைஞ்ச விலையில வாங்கலாம்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. ஆனா, இந்த யூஸ்டு கார் மார்க்கெட்ல சில தில்லாலங்கடி வேலைகளும் நடக்குது. அதுல ரொம்ப சாதாரணமா நடக்கிற ஒரு மோசடிதான் ஓடோமீட்டர் டேம்பரிங். அதாவது, கார் நிறைய ஓடியிருந்தாலும், கிலோமீட்டரை குறைச்சு காட்டி அதிக விலைக்கு விற்க முயற்சி பண்றது. ஆனா, சில விஷயங்களை சரியா கவனிச்சா, இந்த ஓடோமீட்டர் மோசடியை நாமளே ஈஸியா கண்டுபிடிக்கலாம்.
ஓடோமீட்டர் ரீடிங்கை மட்டும் நம்பாதீங்க
காரோட ஓடோமீட்டர்ல குறைவான கிலோமீட்டர் காட்டுதுங்கற ஒரே காரணத்துக்காக வண்டியை வாங்கிடாதீங்க. காரோட ஒட்டுமொத்த கண்டிஷனையும் பாருங்க. சீட் எவ்வளவு தேஞ்சிருக்கு, ஸ்டியரிங் வீல், கியர் நாப், பெடல்கள் எல்லாம் எந்த அளவுக்கு பழையதாகி இருக்குன்னு பாருங்க. இதெல்லாம் வண்டியோட உண்மையான பயன்பாட்டை காட்டிக்கொடுத்துடும். குறைஞ்ச கிலோமீட்டர் ஓடிய வண்டியில் இந்த பாகங்கள் எல்லாம் ரொம்ப பழையதாக தெரிந்தால், அங்கே ஏதோ உதைக்குதுன்னு அர்த்தம்.
சர்வீஸ் ரெக்கார்டுகளை செக் பண்ணுங்க
பயன்படுத்தப்பட்ட கார் வாங்குறதுக்கு முன்னாடி, அதோட சர்வீஸ் ரெக்கார்டுகளை கண்டிப்பா செக் பண்ணனும். அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்கள்ல ஒவ்வொரு சர்வீஸின் போதும் கிலோமீட்டர் ரீடிங்கை குறிச்சு வைப்பாங்க. அந்த சர்வீஸ் ரெக்கார்டில் உள்ள கிலோமீட்டருக்கும், இப்போ ஓடோமீட்டர்ல காட்டுற ரீடிங்கிற்கும் வித்தியாசம் இருக்கான்னு பாருங்க. இப்படி முரண்பாடுகள் இருந்தா, ஓடோமீட்டர்ல கை வச்சிருக்காங்கன்னு சந்தேகப்படலாம்.

டயர்கள் மற்றும் முக்கிய பாகங்களை சரிபார்க்கவும்
காரோட டயர்கள், பிரேக் டிஸ்க், கிளட்ச் போன்ற பாகங்களும் வண்டியோட உண்மையான ஓட்டத்தை பத்தி சில தகவல்களைச் சொல்லும். ஓடோமீட்டர்ல குறைவான கிலோமீட்டர் காட்டியும், டயர்கள் ரொம்ப தேய்ந்து போயிருந்தா, இன்னும் கொஞ்சம் கவனமா சோதிக்கிறது நல்லது. ஆனா, டயர்களை மாத்தியிருக்கவும் வாய்ப்பு இருக்கு. அதனால, இதை மட்டுமே வச்சு ஒரு முடிவுக்கு வராதீங்க.
டிஜிட்டல் ஸ்கேன் உதவும்
இப்போ வர்ற புது மாடல் கார்கள்ல ECU (Electronic Control Unit) சிஸ்டம் இருக்கு. பல வண்டிகள்ல உண்மையான கிலோமீட்டர் விவரங்கள் இந்த ECU-ல சேமிக்கப்பட்டிருக்கும். நம்பிக்கையான ஒரு வொர்க்ஷாப்ல டயக்னாஸ்டிக் ஸ்கேன் செஞ்சு பார்த்தா, வண்டியோட உண்மையான பயன்பாடு பத்தின கூடுதல் விவரங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கு.
டெஸ்ட் டிரைவ் ரொம்ப முக்கியம்
கார் வாங்குறதுக்கு முன்னாடி கண்டிப்பா ஒரு டெஸ்ட் டிரைவ் போங்க. இன்ஜின்ல வித்தியாசமான சத்தம் வருதா, கியர் மாத்தும்போது கஷ்டமா இருக்கா, சஸ்பென்ஷன்ல ஏதாவது பிரச்சினை இருக்கான்னு கவனியுங்க. ஓடோமீட்டர்ல காட்டுறதை விட அதிகமா ஓடிய வண்டிகள்ல இந்த மாதிரி பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம்.
ஆவணங்களை கவனமாக சரிபார்க்கவும்
இன்ஷூரன்ஸ் பேப்பர்கள், பி.யு.சி சர்டிபிகேட், சர்வீஸ் பில்கள் எல்லாத்தையும் கவனமா பாருங்க. இந்த டாக்குமென்ட்களில் இருக்கிற தேதிகளையும், கிலோமீட்டர் விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சில மோசடிகளை கண்டுபிடிக்க முடியும். செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்தா, பெரிய பண நஷ்டத்தை தவிர்க்கலாம். வண்டியோட ஹிஸ்டரி மேல உங்களுக்கு சந்தேகம் இருந்தா, நம்பிக்கையான ஒரு மெக்கானிக் அல்லது ஆட்டோமொபைல் நிபுணர்கிட்ட காட்டிட்டு, அதுக்கப்புறம் டீலை முடிக்கிறதுதான் புத்திசாலித்தனம்.


