Hyundai Aura : அதிக மைலேஜ், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள், குறைவான பராமரிப்பு செலவு, இந்த மூன்றையும் வைத்து மாருதி டிசையருக்கு ஹூண்டாய் ஆரா CNG கடும் போட்டியை கொடுக்கிறது.
இந்தியாவோட செடான் கார் மார்க்கெட்ல, மாருதி டிசையருக்கு ஒரு பெரிய போட்டியாளரா ஹூண்டாய் ஆரா CNG கார் உருவாகியிருக்கு. சிறப்பான மைலேஜ், குறைவான பராமரிப்புச் செலவு, அதிக பாதுகாப்பு அம்சங்கள்னு பல விஷயங்கள்ல வாடிக்கையாளர்களை இந்த கார் கவர்ந்து வருது. மாசம் 5,000-க்கும் அதிகமான CNG யூனிட்கள் விற்பனையாகுதுன்னு ரிப்போர்ட் சொல்லுது.
ஹூண்டாயோட CNG கார் வரிசையில பல மாடல்கள் இருந்தாலும், ஆராவுக்குத்தான் அதிக டிமாண்ட் இருக்கு. செடான் செக்மென்ட்ல அதிகம் விற்பனையாகும் இரண்டாவது காராகவும் ஆரா இருக்கு. ஹூண்டாய் ஆராவின் பெட்ரோல் மாடல் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ₹5,99,990. அதே சமயம், CNG வேரியண்ட்டோட விலை ₹7,81,700-ல இருந்து தொடங்குது. ஆரா CNG கார் ஒரு கிலோவுக்கு சுமார் 30 கி.மீ. வரை மைலேஜ் கொடுக்குதுன்னு நிறைய யூஸர்ஸ் சொல்றாங்க.
இன்ஜின் மற்றும் பெர்ஃபாமென்ஸ்
ஹூண்டாய் ஆராவுல 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் இருக்கு. 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனோட இந்த இன்ஜின் வருது. இது 83 PS பவரையும், 113.8 Nm டார்க்கையும் கொடுக்குது. CNG வேரியண்ட்ல 1.2 லிட்டர் பை-ஃபியூயல் பெட்ரோல் இன்ஜின் இருக்கு. இது 69 PS பவரையும், 95.2 Nm டார்க்கையும் தருது. CNG மாடலோட அதிகாரப்பூர்வ மைலேஜ் சுமார் 28 கி.மீ. ஆகும். வாரன்டி விஷயத்துல ஆரா ஒரு படி மேல இருக்கு. ஹூண்டாய் ஆராவுக்கு 3 வருஷம் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரன்டி கொடுக்குறாங்க. ஆனா, அதோட முக்கிய போட்டியாளரான மாருதி டிசையருக்கு 2 வருஷம் அல்லது 40,000 கிலோமீட்டர் வாரன்டிதான்.
நவீன வசதிகளுடன் ஆரா ஃபேஸ்லிஃப்ட்
இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல்ல ஹூண்டாய் பல புது ஃபீச்சர்ஸை சேர்த்திருக்கு. க்ரூஸ் கண்ட்ரோல், இந்த செக்மென்ட்லயே பெஸ்ட்டான 8 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஈக்கோ கோட்டிங் டெக்னாலஜி, பின்பக்க ஏசி வென்ட்கள், பின்பக்க பவர் அவுட்லெட், கூல்டு கிளவ் பாக்ஸ்னு பல வசதிகள் இருக்கு. புதிய கிரே நிற அப்ஹோல்ஸ்டரி, வேவி பேட்டர்ன் டிசைன்னு இன்டீரியரும் புதுசா இருக்கு. ஃபுட்வெல் லைட்டிங், டைப்-சி ஃப்ரென்ட் USB சார்ஜர், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற அம்சங்களும் இருக்கு. காருக்கு வெளியே புதிய LED டேடைம் ரன்னிங் லைட்ஸ் மற்றும் LED டெயில் லேம்ப்ஸ் நவீன தோற்றத்தைக் கொடுக்குது.

பாதுகாப்பு அம்சங்களில் முன்னிலை
ஃபேஸ்லிஃப்ட் ஆராவுல 30-க்கும் மேற்பட்ட புதிய பாதுகாப்பு அம்சங்கள் இருக்குன்னு ஹூண்டாய் சொல்லுது. ஸ்டாண்டர்டாவே நாலு ஏர்பேக்ஸ் கொடுக்குறாங்க. இதுபோக, சைடு மற்றும் கர்டெய்ன் ஏர்பேக்குகளும் இருக்கு. எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), வெஹிக்கிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (VSM), ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகளும் இந்த கார்ல இருக்கு. எக்ஸ்டென்டட் வாரன்டி பேக்கேஜ் எடுத்தா, வாரன்டியை 7 வருஷம் வரைக்கும் நீட்டிக்க முடியும்.
டிசையருடன் கடுமையான போட்டி
ஹூண்டாய் ஆராவோட நேரடி போட்டி மாருதி சுஸுகி டிசையர்தான். இந்தியாவோட செடான் செக்மென்ட்ல அதிகம் விற்பனையாகும் மாடல் டிசையர்தான். பெட்ரோல் விலை ஏறுனதால, டிசையரோட CNG மாடலுக்கும் நல்ல வரவேற்பு இருக்கு. ஆனா, அதிக மைலேஜ், கூடுதல் ஃபீச்சர்ஸ்னு சொல்லி ஹூண்டாய் ஆரா வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுக்குது. கடந்த சில மாசமா, டிசையர் வாங்க நினைச்சவங்கள்ல ஒரு பகுதியினர் ஆரா பக்கம் திரும்புறதா மார்க்கெட் நிபுணர்கள் சொல்றாங்க.


