சுருக்கம்

ஸ்கோடா கைலாக் விலையில் மாற்றங்கள். சில வேரியண்ட்களின் விலை உயர்வு, மற்றவற்றில் குறைவு. புதிய விலைகள் மற்றும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

அறிமுகமான சில நாட்களிலேயே ஸ்கோடா கைலாக் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமானது. மார்ச் மாத விற்பனையில் பாதிக்கும் மேல் கைலாக் விற்பனையாகியுள்ளது. தற்போது சில வேரியண்ட்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.7.89 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகமான கைலாக்கின் அடிப்படை மாடலான கிளாசிக் விலை தற்போது ரூ.8.25 லட்சமாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.36,000 உயர்வு. ஆனால் சிக்னேச்சர் பிளஸ், பிரெஸ்டீஜ் மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

கிளாசிக், சிக்னேச்சர் வேரியண்ட்களின் விலை உயர்ந்தாலும், சிக்னேச்சர் பிளஸ் வேரியண்ட் விலை ரூ.15,000 குறைந்துள்ளது. சிக்னேச்சர் பிளஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் விலை ரூ.5,000 குறைந்துள்ளது. பிரெஸ்டீஜ் வேரியண்டில் தான் அதிகபட்ச விலை குறைப்பு. ரூ.13.35 லட்சத்தில் இருந்து ரூ.12.89 லட்சமாக குறைந்துள்ளது. ரூ.46,000 குறைவு. பிரெஸ்டீஜ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் விலை ரூ.41,000 குறைந்து ரூ.13.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

கைலாக் வருகையால் ஸ்கோடாவின் மொத்த விற்பனை அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் 7,422 கார்கள் விற்பனையாகி உள்ளதில் 5,327 கார்கள் கைலாக். 24 ஆண்டுகளில் ஸ்கோடா இவ்வளவு கார்களை விற்பனை செய்வது இதுவே முதல் முறை.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களின் MQB A0-IN பிளாட்ஃபார்மில் தான் கைலாக் தயாரிக்கப்படுகிறது. குஷாக், ஸ்லாவியா கார்களும் இதே பிளாட்ஃபார்மில் தான் தயாரிக்கப்படுகிறது. ஸ்பிளிட் ஹெட்லேம்ப், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப், ஸ்கொயர்-ஆஃப் டெயில் லைட், பட்டர்ஃபிளை கிரில் போன்றவை இதன் சிறப்பம்சம்.

1.0 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 115 bhp பவர், 178 Nm டார்க் திறன் கொண்டது. 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. 10.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும்.

குஷாக்கை போன்றே கைலாக்கின் கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டு, சைடு வென்ட், க்ளைமேட் கண்ட்ரோல், ஸ்டீயரிங், 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் போன்றவை இரண்டு மாடல்களிலும் ஒரே மாதிரியாக உள்ளது. 10 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப், கீலெஸ் என்ட்ரி, வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, சீட் வென்டிலேஷன், லெதரெட் அப்ஹோல்ஸ்டரி போன்ற வசதிகள் உள்ளன.

பாரத் NCAP நடத்திய க்ராஷ் டெஸ்டில் கைலாக்கிற்கு 5 ஸ்டார் ரேட்டிங் கிடைத்துள்ளது. 6 ஏர்பேக், ABS, EBD, ESC, EDL, ஐசோஃபிக்ஸ் சைல்ட் சீட் மவுண்ட் போன்ற பாதுகாப்பு வசதிகள் உள்ளன.