160 கி.மீ. ரேன்ஜ், மூன்று ரைடிங் மோட்கள்... வேற லெவல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்..!

இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சம் 60 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 

new electric scooter offers high performance and better range 

ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் பெரும் கவனத்தை பெற்று இருக்கிறது. ரே 7.7 என அழைக்கப்படும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தோற்றத்தில் அனைவரையும் கவர்ந்து இழுக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இதன் செயல்திறன் மற்றும் ரேன்ஜ் இந்த ஸ்கூட்டரை வியந்து பார்க்க வைக்கிறது.

இதையும் படியுங்கள்: மீண்டும் விலை உயர்வு... வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த டொயோட்டா...!

புதிய ரே 7.7. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் 10.7 கிலோவாட் மோட்டார் மற்றும் 7.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரை தொடர்ச்சியாக 100 கி.மீ. வேகத்தில் ஓட்டும் போது 110 கி.மீ. ரேன்ஜ் வழங்குகிறது. ஒரு வேளை ஸ்கூட்டரின் ரேன்ஜ்-ஐ நீட்டிக்க விரும்பினால் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் ஓட்டலாம். இவ்வாறு செய்யும் போது ஸ்கூட்டர் ரேன்ஜ் 130 கி.மீ. ஆக அதிகரிக்கும். 

இதையும் படியுங்கள்: இணையத்தில் லீக் ஆன புகைப்படங்கள்... டி.வி.எஸ். ரோனின் இப்படி தான் இருக்குமாம்...!

ரேன்ஜ் விவரங்கள்:

இதை விட அதிக ரேன்ஜ்  வேண்டும் என்றாலும், இந்த ஸ்கூட்டர் அதற்கு தனியே ஒரு ஆப்ஷனை வழங்குகிறது. அதாவது மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும். இவ்வாறு செய்யும் போது ரே 7.7 அதிகபட்சமாக 160 கி.மீ. ரேன்ஜ் வழங்கும். இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சம் 60 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. மேலும் மணிக்கு அதிகபட்சம் 125 கி.மீ. வேகத்தில் செல்லும்.

இதையும் படியுங்கள்: மொத்தம் ஆறு புது மாடல்கள்... பெரும் அதிரடிக்கு தயாராகும் ராயல் என்பீல்டு...!

new electric scooter offers high performance and better range 

பெரிய பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருப்பதால், இதனை சார்ஜ் செய்ய அதிக நேரம் ஆகும் என பலரும் நினைப்பர். ஆனால் இதற்கும் ரே 7.7 ஷாக் கொடுக்கிறது. இந்த ஸ்கூட்டரை வழக்கமாக வீட்டில் இருக்கும் சாக்கெட் மூலம் சார்ஜ் செய்ய 4.5 மணி நேரங்களே ஆகும். மேலும் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 3.5 மணி நேரம் தான் ஆகும். இத்துடன் 3.3 கிலோ வாட் பாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. 

இந்த பாஸ்ட் சார்ஜர் ஸ்கூட்டரை முழு சார்ஜ் செய்ய 2 மணி 35 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது. மேலும் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்ற ஒரு மணி 50 நிமிடங்களை எடுத்துக் கொள்ளும். இதில் உள்ள பேட்டரி காரணமாகவே இதன் எடை 165 கிலோவாக இருக்கிறது. இதன் சேசிஸ் டியுபுலர் ஸ்டீல் ஃபிரேம், டெலிஸ்கோபிக் ஃபோர்க், டூயல் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன. பிரேக்கிங்கிற்கு 260 மில்லிமீட்டர் டிஸ்க், 220 மில்லிமீட்டர் டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது.

அம்சங்கள்:

இந்த ஸ்கூட்டரில் 5 இனஅச் TFT டிஸ்ப்ளே, ப்ளூடூத் நேவிகேஷன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் - சிட்டி, ஸ்போர்ட் மற்றும் ஃபுளோ என மூன்று விதமான ரைடிங் மோட்களை கொண்டுள்ளது. இத்துடன் பார்க் அசிஸ்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஆல்-எல்.இ.டி. லைட்டிங், இலுமினேட் செய்யப்பட்ட அண்டர்சீட் ஸ்டோரேஜ், ஆண்டி-தெஃப்ட் அலாரம் உள்ளது. 

புதிய ரே 7.7 மாடலின் விலை 9 ஆயிரத்து 990 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 லட்சத்து 26 ஆயிரம் என நிர்ணயம் செ்யயப்பட்டு உள்ளது. இதன் விலை காரணமாகவே இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பை பெருமளவு குறைத்து விடுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios