Mercedes Benz GLS facelift : சூப்பர் சொகுசு காரை களமிறக்கும் Benz - எப்போது? இந்திய மார்க்கெட்டில் விலை என்ன?
Mercedes Benz GLS facelift Launch : உலக அளவிலும், இந்தியாவிலும் புகழ்பெற்ற Mercedes Benz நிறுவனம், தனது புதிய GLS காரின் Facelift வெர்ஷனை எதிர்வரும் 2024ம் ஆண்டு ஜனவரியில் வெளியிடவுள்ளது.
Mercedes-Benz India, தனது GLS Facelift காரை ஜனவரி 8, 2024 அன்று அறிமுகப்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட்டின் வெளிப்புறத்தில் உள்ள காஸ்மெட்டிக் அப்டேட்களில், கிரில்லில் நான்கு கிடைமட்ட லூவ்ரெஸ்கள், சில்வர் ஷேடோ ஃபினிஷ், ஏர் இன்லெட் கிரில்ஸ் மற்றும் ஹை-க்ளாஸ் பிளாக் சர்ரவுண்ட்ஸ் கொண்ட புதிய முன்பக்க பம்பர் மற்றும் புதிய டெயில்-லேம்ப்கள் ஆகியவை அடங்கும்.
இந்த காரில் வெளியில் இருப்பதை விட உட்புறத்தில் தான் அதிக அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் உள்ள மேம்படுத்தப்பட்ட MBUX இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மிகப்பெரியது. குறைந்த வேக 360 டிகிரி கேமரா மற்றும் கேடலானா பீஜ் மற்றும் பாஹியா பிரவுன் லெதர் உள்ளிட்ட புதிய அப்ஹோல்ஸ்டரி விருப்பங்கள் ஆகியவை அடங்கும்.
மீண்டும் ப்ரெஷ் ஆக களமிறங்கும் ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் 2024.. சொல்லி அடிக்குமா.?
இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள GLS போலவே, GLS 450 4Maticல் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் GLS 400d 4Maticல் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர் டீசல் யூனிட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4மேடிக் AWD அமைப்பு ஆகியவை GLS ஃபேஸ்லிஃப்ட்டின் இரண்டு பதிப்புகளிலும் நிலையானதாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது
இந்த மாருதி காரை வாங்குங்க.. ஜிஎஸ்டி இலவசம்.. அதுவும் இத்தனை லட்சத்துக்கா.!!
பென்ஸ் நிறுவனம் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் GLS ஃபேஸ்லிஃப்டுடன் தொடங்கி ஒன்பது புதிய மாடல்களை இந்தியாவிற்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு வரவிருக்கும் புதிய மெர்சிடிஸ் கார்கள் மற்றும் SUVகளின் வரவு, பென்ஸ் கார்களை விரும்புகின்றவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜனவரி 8ம் தேதி வெளியாகவுள்ள GLS Facelift சுமார் 1 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.