மாருதி சுசுகி 2024 பிளான்! முதல் எலெக்ட்ரிக் கார் உள்பட மூன்று புதிய கார்களை களமிறக்கத் திட்டம்!

மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை வெளியிட உள்ளது. மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இவிஎக்ஸ் (eVX) என்ற காரையும் அறிமுகப்படுத்த உள்ளது.

Maruti Suzuki to introduce three cars in 2024 including first EV sgb

இந்த ஆண்டில் யாரும் எதிர்பாராத வகையில் ஜிம்னி மற்றும் ஃபிராங்க்ஸ் என 2 கார்களை அறிமுகப்படுத்திய மாருதி நிறுவனம் 2024ஆம் ஆண்டிலும் புதிய கார்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. வெளிவர இருக்கும் கார்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி கார் பிரியர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளன.

2024ஆம் ஆண்டு மாருதி நிறுவனம் மூன்று புதிய கார்களை களம் இறக்க உள்ளது. மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை வெளியிட உள்ளது. மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இவிஎக்ஸ் (eVX) என்ற காரையும் அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்விப்ட், ஸ்விஃப்ட் டிசையர் கார்களின் நான்காம் தலைமுறை மாடல் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்.

மாருதி சுஸூகி ஸ்விப்ட்:

புதிய மாருதி சுசுகி ஸ்விப்ட் கார் டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது. பின் இந்தக் காரின் டெஸ்ட் டிரைவ் படங்களும் வெளியாகியுள்ளன. காரின் தோற்றத்திலும் எஞ்ஜினிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி சுஸூகி டிசையர்:

இதுவும் ஸ்விஃப்ட் காரைப் போலவே பல மாறுதல்களைக் கொண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த காரின் உள்ள அம்சங்கள், பாதுகாப்பு வசதிகள் அனைத்துமே புதிய ஸ்விஃப்ட் காரில் இருப்பது போல இருக்கப்போகிறது என்று தெரிகிறது. மிகப்பெரிய பூட்ஸ் ஸ்பேஸ் உடன் இந்தக் கார் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மாருதி சுசுகி இவிஎக்ஸ்:

இது மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கும். இந்தக் காரின் கான்செப்ட் வெர்ஷன் ஜனவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் காண முடிந்தது. 2024ஆம் ஆண்டுக்குள் இந்தக் கார் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பவர் சீட்டிங், 360 டிகிரி கேமரா, 6 ஏர் பேக், அடாஸ் தொழில்நுட்பம் என பல சிறப்பு முக்கிய அம்சங்களுடன் வெளியாக உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 400-450 கி.மீ. தூரம் பயணிக்கும் அட்டகாசமான ரேஞ்ச் கொடுக்கும் காராகவும் இருக்கும் எனத் தெரிகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios