டெல்லியில் இந்திய தூய்மை போக்குவரத்து உச்சி மாநாடு: சர்வதேச நாடுகளின் பிரநிதிகள் பங்கேற்பு
போக்குவரத்துத் துறையில் நுண்ணறிவு மற்றும் புதுமையான உத்திகளை வளர்ப்பது கார்பனேற்றத்தைக் கட்டுபடுத்தும் இந்தியாவின் முயற்சிக்குக் கைகொடுக்கும் என ஐசிசிடி அமைப்பின் பிரதிநிதி அமித் பட் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய ஜி20 செயலகம், தூய்மையான போக்குவரத்துக்கான சர்வதேச கவுன்சில் (ஐசிசிடி) உடன் இணைந்து திங்கட்கிழமை "இந்திய தூய்மை போக்குவரத்து உச்சி மாநாட்டை" நடத்துகிறது. மாலை 5 மணிவரை நடக்கும் இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வு காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
இம்பீரியல் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இந்தியாவின் நெருக்கடியான போக்குவரத்து சவால்களை எதிர்கொள்ளவும், மேலும் நிலையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கவும் ஆலோசனை செய்யப்படுகிறது. இதில் சர்வதேச சிந்தனையாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில் வல்லுநர்கள் பலர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1! செப். 2ஆம் தேதி ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவிப்பு!
இந்த மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட ஷெர்பா அமிதாப் காந்த் கூறுகையில், "இந்த உச்சிமாநாடு தூய்மையான மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக இந்தியாவின் முயற்சியில் ஒரு பகுதி ஆகும். இது பல்வேறு பிரச்சினைகளுக்கு அற்புதமான தீர்வு காண வழிவகுக்கும். இந்தியா 2070-க்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான உறுதிப்பாட்டுடன் இருக்கிறது. மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது உட்பட தூய்மையான போக்குவரத்து முறைகளுக்கு மாறுவது, பொதுப் போக்குவரத்து அமைப்புகளை மேம்படுத்துவது ஆகியவை இந்த பயணத்தில் முக்கியமான படிகளாக இருக்கும் என்பதை உச்சிமாநாட்டில் தலைவர்கள் அங்கீகரிக்கின்றனர்" என்றார்.
G20 மற்றும் B20 அமைப்புகளின் முன்முயற்சியால் நடைபெறும் இந்த நிகழ்வு, இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), சர்வதேச போக்குவரத்து மன்றம் (ITF) மற்றும் ராஹ்கிரி அறக்கட்டளை போன்ற அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது.
ஆதார் நம்பரை மட்டும் வைத்து வங்கிக் கணக்கை ஹேக் செய்ய முடியுமா?
"இந்த உச்சிமாநாட்டின் முடிவுகள், இந்தியாவிற்கும் உலகளாவிய சமூகத்திற்கும் பிரகாசமான எதிர்காலத்தை இது உறுதி செய்கிறது. போக்குவரத்துத் துறையில் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், மிக முக்கியமான சவால்களில் ஒன்றைச் சமாளிப்பதற்கான வலிமையை இந்தியா எடுத்துக்காட்டுகிறது" என்று நிதி ஆயோக்கின் மூத்த ஆலோசகர் சுதேந்து சின்ஹா கூறினார்.
ஐசிசிடி அமைப்பின் இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநர் அமித் பட் கூறுகையில், "இந்திய தூய்மைப் போக்குவரத்து உச்சி மாநாட்டை இணைந்து நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் G20 செயலகம் மற்றும் மதிப்பிற்குரிய பிற அமைப்புகளின் கூட்டு முயற்சி மூலம், இது சாத்தியமாகியுள்ளது. நுண்ணறிவு மற்றும் புதுமையான உத்திகளை வளர்ப்பது கார்பனேற்றத்தைக் கட்டுபடுத்தும் இந்தியாவின் முயற்சிக்குக் கைகொடுக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவின் நிலையான எதிர்காலத்தில் போக்குவரத்துத் திட்டத்தில் பல்வேறு தரப்பினரை ஒன்றிணைக்கும் ஒரு மைல்கல் நிகழ்வாக இந்த மாநாடு இருப்பதாகவும் அமித் பட் கூறினார்.
டொயோட்டாவின் புதிய ரூமியன் காருக்கு முன்பதிவு ஆரம்பம்! ரூ.10.29 லட்சம் முதல் விற்பனை