FY23ல் 3.8 கோடி கார்கள் விற்பனை! டாப் விற்பனையில் ஹூண்டாய், டாடா, மஹிந்திரா, கியா நிறுவனங்கள்!

FY23-ல் கார் விற்பனையில் SUV வகை கார்கள் மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளன.
 

FY23 car sales record! Hyundai, Tata, Mahindra, Kia got top places

பயணிகள் வாகன விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையில் கடந்த நிதியாண்டில் FY23-ல் மட்டும் சுமார் 3,889,545 கார்கள் விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளன. கடந்த நிதியாண்டில் மட்டும் மாருதி சுஸூகி இந்தியா, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, டாடா மோட்டார், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் கியா இந்தியா ஆகிய நிறுவனங்களின் கார்கள் சந்தையில் சக்கை போடு போட்டுள்ளன.

இதற்கு முன்பு FY19 நிதியாண்டில் 3,377,436 கார்கள் விற்பனையே அதிகபட்சமாக இருந்தது. FY22ம் நிதியாண்டில் 3,069,499 கார்களும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. FY23ம் ஆண்டுடன் FY19ம் ஆண்டு கார் விற்பனையை ஒப்பிடுகையில் 15.16% அதிகம். இதே FY22ம் ஆண்டு கார் விற்பனையுடன் ஒப்பிடுகையில் 26.72% அதிகம்.

FY23-ல் பயணிகள் வாகன (PV) பிரிவில் மிகப்பெரிய பங்களிப்பை ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனங்கள் (SUVs) செய்துள்ளன. இது SUV கார்கள் மட்டும் 1,673,488 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி 43.02% பங்கைக் கொண்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் FY19ல்- 23.19% SUV கார்கள் அதாவது 783,119 கார்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

FY23 car sales record! Hyundai, Tata, Mahindra, Kia got top places


Tata Motors Passenger Vehicles Ltd மற்றும் Tata Passenger Electric Mobility Ltd நிர்வாக இயக்குனர் ஷைலேஷ் சந்திரா கருத்துப்படி, FY23-ல் தொழில்துறையின் வளர்ச்சியானது, இந்த ஆண்டின் தொடக்கத்தில், கொரோனா தொற்றுக்கு பிந்தைய தேவையினால் ஏற்பட்டது என்றார்.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுஸுகி இந்தியா, FY23-ல் மட்டும் 1,606, 870 கார்களை விற்பனை செய்துள்ளது. அதைத் தொடர்ந்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா, உள்நாட்டு சந்தையில் 567,546 கார்களை விற்பனை செய்துள்ளது.

டீசல் என்ஜினுடன் அறிமுகமான பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவி கார்... விலை எவ்வளவு தெரியுமா? விவரம் உள்ளே!!

டாடா மோட்டார்ஸ் FY23-ல் 538,640 கார்களையும், மஹிந்திரா & மஹிந்திரா பிப்ரவரி மாத கணக்குப்படி 323,256 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த மார்ச் 31க்குள் 350,000 கார்களுக்கு மேல் விற்பனை செய்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kia இந்தியாவின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து முன்னேறி வருகிறது.. FY23-ல் 269,229 கார்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios