டீசல் என்ஜினுடன் அறிமுகமான பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எஸ்யூவி கார்... விலை எவ்வளவு தெரியுமா? விவரம் உள்ளே!!

டீசல் என்ஜினுடன் கூடிய எக்ஸ் 3 எஸ்யூவி காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

bmw x3 suv car launched with diesel engine at india

டீசல் என்ஜினுடன் கூடிய எக்ஸ் 3 எஸ்யூவி காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. காற்று மாசை குறைக்க மத்திய அரசால் கடந்த 2020 ஏப்.1 முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. இதை அடுத்து அனைத்து வாகனங்களும் இந்த விதிமுறையின் கீழ் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த விதிமுறையின் 2 ஆம் கட்டம் வரும் 2023 ஏப்ரல் 1 இல் 3 வருடங்களுக்கு பிறகு அமலுக்கு வருகிறது. ரியர்-டிரைவ்-எமிஷன் (RDE) என்பதுதான் பிஎஸ்6 2 ஆம் கட்டத்தின் முக்கிய கட்டுப்பாடாக பார்க்கப்படுகிறது. அத்துடன் இ20 என்ற எத்தனால் 20% கலக்கப்பட்ட பெட்ரோலை ஏற்கக்கூடியதாக என்ஜின் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் ஏப்ரல் 1 இல் இருந்து அமலுக்கு வருகிறது. மேலும், முதல் கட்டுப்பாடுகள் டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தியதை போல, பிஎஸ்6-இன் 2 ஆம் கட்ட விதிமுறைகளும் சில டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தியுள்ளன.

இதையும் படிங்க: ஹூண்டாய் சொனாட்டா 2023 பற்றிய தகவலை வெளியிட்டது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம்... மார்ச் 30 உலகளாவிய அறிமுகம்!!

இந்த நிலையில் உலகின் பிரபலமான லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ அதன் எக்ஸ்3 எஸ்யூவி காரில் புதிய டீசல் வேரியண்ட்களை எக்ஸ்.லைன் மற்றும் எம் ஸ்போர்ட் என்ற பெயர்களில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் எக்ஸ்.லைன் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.67.50 லட்சமாகவும், எம் ஸ்போர்ட் வேரியண்ட்டின் விலை ரூ.69.90 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ள இந்த புதிய பிஎம்டபிள்யூ டீசல் கார்கள் பிஎம்டபிள்யூவின் அனைத்து டீலர்ஷிப் மையங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எக்ஸ்3 இன் இந்த புதிய டீசல் வேரியண்ட்களில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 5,200 ஆர்பிஎம், 188 பிஎச்பி & 1,750 - 2,500 ஆர்பிஎம், 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

இதையும் படிங்க: புதிய சிட்ரோன் சி3! நெக்ஸான், பிரெஸ்ஸாவுடன் போட்டிக்கு வரும் புதிய கார்

மேலும் இந்த என்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூவின் எக்ஸ்.டிரைவ் அனைத்து-சக்கர-டிரைவ் சிஸ்டம் இணைக்கப்படுகிறது. இதனால் இந்த காரில் என்ஜினின் ஆற்றல் காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்லும். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கி.மீ. வேகத்தை வெறும் 7.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எக்ஸ்3 டீசல் காரின் டாப்-ஸ்பீடு 213 கிமீ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றம் வழக்கமான எக்ஸ்3 வேரியண்ட்கள் உடன் ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் இல்லை. காரின் முன்பக்கத்தில் செங்குத்தான ஏர் இண்டேக் துளைகளை கொண்ட கிட்னி வடிவ க்ரில், அடாப்டிவ் ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் பொருத்தப்படுகின்றன.  உட்புறத்தில் மல்டி-ஃபங்சன் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் எலக்ட்ரிக் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும் நிறங்களை பொறுத்தவரை இந்த கார் மினரல் ஒயிட், பைடோனிக் ப்ளூ, புரூக்ளின் கிரே மற்றும் பிளாக் சஃபைர் ஆகிய நான்கு வண்ணங்களில் வழங்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios