இத்தாலிய பைக் தயாரிப்பாளரான டுகாட்டி, இந்தியாவில் புதிய XDiavel V4 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்போர்ட்ஸ் பைக் சக்தியையும், க்ரூஸர் பைக் வசதியையும் ஒருங்கிணைக்கும் இந்த மாடல், 1,158cc V4 கிராண்டூரிஸ்மோ இன்ஜின் மற்றும் நவீன அம்சங்களுடன் வருகிறது.
பிரீமியம் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் பைக் பிரிவில் இத்தாலிய நிறுவனம் டுகாட்டி மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது. இந்திய சந்தையில் புதிய Ducati XDiavel V4 பைக்கை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. ஸ்போர்ட்ஸ் பைக் சக்தியையும், க்ரூஸர் பைக் வசதியையும் ஒருங்கிணைக்கும் இந்த மாடல், நீண்ட தூர பயணத்தை விரும்பும் ரைடர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய XDiavel V4 இரண்டு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. Burning Red கலர் வேரியனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.30.89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Black Lava கலர் வேரியன்ட் ரூ.31.20 லட்சம் எந்த விலையில் கிடைக்கிறது. கருப்பு லாவா ஷேடு சற்றே விலை உயர்ந்ததாக இருந்தாலும், அதன் டார்க் மற்றும் பிரீமியம் லுக் காரணமாக பலரை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டுகாட்டியின் “X” டிசைன் தத்துவம் இந்த பைக்கில் தெளிவாக தெரிகிறது. இது அதிக ரிலாக்ஸ்டான ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையில் உள்ளது. தாழ்வான இருக்கை, அகலமான ஸ்வெப்ட்-பேக் ஹேண்டில்பார், முன்னோக்கி வைக்கப்பட்ட ஃபுட்பெக்குகள் ஆகியவை க்ரூஸர் ஸ்டைல் வசதியை உறுதி செய்கின்றன. பில்லியன் சீட்டும் முன்பை விட அதிக வசதியாக மாற்றப்பட்டுள்ளது. விரும்பினால், ஸ்போர்ட்டியான ரைடிங் பொசிஷனுக்காக சென்டர்-செட் ஃபுட்பெக்குகளையும் அதிகாரப்பூர்வ ஆக்சஸரியாக பொருத்தலாம்.
வசதிக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், செயல்திறனில் டுகாட்டி எந்த சமரசமும் செய்யவில்லை. இதில் 1,158cc V4 கிராண்டூரிஸ்மோ இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சுமார் 166.28 bhp பவரும், 126 Nm டார்க்கும் உருவாக்குகிறது. மென்மையான க்ரூசிங் முதல் ஆக்கிரமிப்பு ஸ்போர்ட்டி ரைடிங் வரை, இரண்டையும் இது சமநிலையாக வழங்குகிறது.
மேம்பட்ட சஸ்பென்ஷன், சக்திவாய்ந்த பிரெம்போ பிரேக்குகள், ரைடிங் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல், ஈபிஎஸ் போன்ற நவீன எலக்ட்ரானிக்ஸ் அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும், பனிகேல் V4 மற்றும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4-ல் பயன்படுத்தப்படும் 6.9-இன்ச் TFT டிஸ்ப்ளே இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பழைய XDiavel 1260-ஐ விட குறைந்த 770 மிமீ இருக்கை உயரம், அகலமான ரைடர் சீட் மற்றும் கூடுதல் சஸ்பென்ஷன் பயணம் ஆகிய மேம்பாடுகள், XDiavel V4-ஐ ஒரு முழுமையான லக்ஷுரி பெர்ஃபார்மென்ஸ் க்ரூஸராக மாறியுள்ளது.


