மணிக்கு 275 கி.மீ. வேகம்... எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் உருவாக்கும் டுகாட்டி...!
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மோட்டோ-இ பந்தயத்திற்கான ரேஸ் பைக் மாடல்களை டுகாட்டி நிறுவனம் தான் வழங்க இருக்கிறது.
டுகாட்டி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல் விவரங்கள் கடந்த சில மாதங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இது மோட்டோ இ ரேசிங்கிற்காக உருவாக்கப்பட்டு வரும் உயர் ரக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். டுகாட்டி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் மோட்டோ இ V21L என அழைக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: புது பிரெஸ்ஸா வாங்க போறீங்களா? இதை தெரிஞ்சுகோங்க....!
டுகாட்டி நிறுவனம் புதிய மோட்டோ-இ V21L ரேஸ் பைக் விவரங்களை வெளியிட்டு உள்ளது. இது பற்றிய தகவல்கள் டுகாட்டி அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெழளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் இன்னமும் ப்ரோடோடைப் வடிவில் தான் உள்ளது. மோட்டோ-இ பந்தய களத்திற்கு செல்லும் முன் இந்த மாடல் பலக் கட்ட சோதனைகளை எதிர்கொள்ள இருக்கிறது.
இதையும் படியுங்கள்: வேற லெவல் அம்சங்கள்... சக்திவாயந்த என்ஜினுடன் அறிமுகமான டொயோட்டா கார்..!
டுகாட்டி பேனிகேல் வி4:
முன்னதாக இந்த மாடலின் விவரங்கள் ஏப்ரல் மாத வாக்கில் வெளியிடப்பட்டு இருந்தது. தோற்றத்தில் இந்த மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் டுகாட்டி நிறுவனத்தின் ரோட்-லீகல் பேனிகல் வி4 போன்றே காட்சி அளிக்கிறது. தலைசிறந்த ஏரோ டைனமிக் பாடியினுள் 18 கிலோ வாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்: விற்பனையில் மாஸ் காட்டிய ஏத்தர் எனர்ஜி... ஒரே மாதத்தில் இத்தனை யூனிட்களா?
முன்புற அலுமினியம் மோனோக்கில் இந்த பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. மோட்டோ இ V21L மாடல் மொத்த எடை 225 கிலோ ஆகும். இதில் பெரும்பாலான எடையை பேட்டரியே எடுத்துக் கொள்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்த திறன் 110 கிலோவாட் அளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
செயல்திறன் விவரங்கள்:
இதன் அதிகபட்ச டார்க் 140 நியூட்டன் மீட்டர்கள் ஆகும். இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 275 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும் திறன் கொண்டுள்ளது. இதில் உள்ள பேட்டரி உடன் 21 கிலோ மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது. இது 18 ஆயிரம் ஆர்.பி.எம்.-ஐ வெளிப்படுத்தும். மோட்டார் மற்றும் இன்வெர்ட்ரின் பின்புறம் கார்பன் பைபர் ரியர் சப்-ஃபிரேம் உள்ளது. இதற்கு கீழ் புறமாக அலுமினியம் ஸ்விங் ஆர்ம் உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மோட்டோ-இ பந்தயத்திற்கான ரேஸ் பைக் மாடல்களை டுகாட்டி நிறுவனம் தான் வழங்க இருக்கிறது. இதில் குறைந்த பட்சமாக 18 யூன்ட்களாவது வழங்கப்பட்டு இருக்கும்.
புதிய ஸ்கிராம்ப்ளர் பைக்:
டுகாட்டி நிறுவனம் கடந்த வாரம் தான் தனது ஸ்கிராம்ப்ளர் சீரிஸ் மாடல்களை அப்டேட் செய்து புது வெர்ஷனை அறிமுகம் செய்து இருந்தது. புது டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் பைக் - டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் அர்பன் மோட்டார்ட் என அழைக்கப்படுகிறது. இந்த மாடல் டுகாட்டி நிறுவனத்தின் டாப் எண்ட் ஸ்கிராம்ப்ளர் மாடல் ஆகும். இதன் விலை ரூ. 11 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.