ரூ. 60 ஆயிரம் வரை தள்ளுபடி... டாடா மோட்டார்ஸ் சூப்பர் அறிவிப்பு..!

இந்த மாதத்திற்கான சலுகைகள் டாடா அல்ட்ரோஸ், பன்ச், நெக்சான் EV மற்றும் டிகோர் EV போன்ற மாடல்களுக்கு வழங்கப்படவில்லை.

Discounts on Tata Harrier, Safari, Tiago save up to rs 60000 

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் வாகன விலையை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூலை மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது. இந்த மாதத்திற்கான சிறப்பு சலுகைகள் தள்ளுபடி, பலன்கள், எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் சலுகை வடிவில் வழங்கப்படுகின்றன. 

இதையும் படியுங்கள்: இ மொபிலிட்டி-னா என்ன தெரியுமா? வைரலாகும் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பதிவு..!

இதில் டாடா டியாகோ, டிகோர், நெக்சான், சஃபாரி மற்றும் ஹேரியர் என டாடா நிறுவன கார் மாடல்களை சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிட முடியும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த மாதத்திற்கான சலுகைகளை அதன் அல்ட்ரோஸ், பன்ச், நெக்சான் EV மற்றும் டிகோர் EV போன்ற மாடல்களுக்கு வழங்கவில்லை. இந்த மாடல்களுக்கு அதிக காத்திருப்பு காலம் ஏற்பட்டு இருப்பதால், இந்த முடிவை டாடா மோட்டார்ஸ் எடுத்து இருக்கிறது.

இதையும் படியுங்கள்: ரூ. 34 லட்சம் விலையில் புது டுகாட்டி பைக் அறிமுகம்... என்ன ஸ்பெஷல் தெரியுமா?

டாடா ஹேரியர்:

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 60 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இது மட்டும் இன்றி கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ. 20 ஆயிரம் வரையிலான பலன்கள் கிடைக்கும். இந்திய சந்தையில் டாடா ஹேரியர் மாடலுக்கு எம்ஜி ஹெக்டார், ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற மாடல்கள் போட்டியாக அமைகின்றன.

இதையும் படியுங்கள்: இந்திய விற்பனையில் மாஸ் காட்டும் எலெக்ட்ரிக் கார்கள் - எந்த மாடல் முதலிடம் தெரியுமா?

Discounts on Tata Harrier, Safari, Tiago save up to rs 60000 

டாடா சஃபாரி:

இந்திய சந்தையில் டாடா சஃபாரி மாடலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் ரூ. 40 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 170 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இந்த மாடல் மஹிந்திரா XUV700, எம்ஜி ஹெக்டார் பிளஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

டாடா டியாகோ:

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேச்பேக் மாடலான டியாகோ இந்திய சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர், செலரியோ மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த மாடலுக்கு அதிகபட்சம் ரூ.31 ஆயிரத்து 500 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

டாடா டிகோர்:

ஜூலை மாதத்தில் டாடா டிகோர் மாடலை வாங்குவோருக்கு ரூ. 31 ஆயிரத்து 500 வரையிலான தள்ளுபடி கிடைக்கும். டிகோர் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் காம்பேக்ட் செடான் மாடல் ஆகும். இந்திய சந்தையில் டாடா டிகோர் மாடலுக்கு போட்டியாக மாருதி சுசுகி டிசையர், ஹோண்டா அமேஸ் மற்றும் ஹூண்டாய் ஆரா போன்ற மாடல்கள் உள்ளன. 

டாடா நெக்சான்:

ஜூலை மாதத்தில் குறைந்த சலுகை பெற்ற மாடலாக டாடா நெக்சான் உள்ளது. இந்த மாடலை வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாடல் மஹிந்திரா XUV300, கியா சொனெட், ஹூண்டாய் வென்யு, டொயோட்டா அர்பன் குரூயிசர் மற்றும் முற்றிலும் புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios