Asianet News TamilAsianet News Tamil

இ மொபிலிட்டி-னா என்ன தெரியுமா? வைரலாகும் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பதிவு..!

ஆனந்த் மஹிந்திரா தனது சமூக வலைதளங்களில் பதிவிடும் பெரும்பாலான பதிவுகள் பலரின் கவனத்தை ஈர்ப்பது வாடிக்கை தான். 

Anand Mahindra Shares New Video Leaves Twitter In Splits
Author
india, First Published Jul 5, 2022, 9:08 AM IST

மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் ஆவார். சமூக வலைதளங்களில் தான் எதிர்கொள்ளும் சுவாரஸ்ய சம்பவங்கள் அடங்கிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் இந்த சமூக வலைதளங்கள் பலரின் வாழ்க்கையை மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. 

இதையும் படியுங்கள்: ரூ. 34 லட்சம் விலையில் புது டுகாட்டி பைக் அறிமுகம்... என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ஆனந்த் மஹிந்திரா தனது சமூக வலைதளங்களில் பதிவிடும் பெரும்பாலான பதிவுகள் பலரின் கவனத்தை ஈர்ப்பது வாடிக்கையான விஷயம் தான். அந்த வகையில் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. வைரல் பதிவில் இ மொபிலிட்டி பற்றி ஆனந்த் மஹிந்திரா விளக்கி இருக்கிறார். 

இதையும் படியுங்கள்: இந்திய விற்பனையில் மாஸ் காட்டும் எலெக்ட்ரிக் கார்கள் - எந்த மாடல் முதலிடம் தெரியுமா?

வைரல் வீடியோவில் நான்கு பேர் சக்கரம் பொருத்தப்பட்ட மொபைல் டைனிங் டேபிலில் அமர்ந்து கொண்டு உணவு உட்கொள்கின்றனர். வழியில் பெட்ரோல் பங்க்-இல் எரிபொருள் நிரப்பிக் கொண்டு செல்கின்றனர். இந்த வீடியோவை பதிவிட்ட ஆனந்த் மஹிந்திரா, “எனக்கு தெரிந்த வரை இது தான் இ மொபிலிட்டி, இதில் இ என்பது ஈட் என்பதை குறிக்கிறது,” என குறிப்பிட்டு இருக்கிறார். 

இதையும் படியுங்கள்: 160 கி.மீ. ரேன்ஜ், மூன்று ரைடிங் மோட்கள்... வேற லெவல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்..!

24 நொடிகள் ஓடும் விடியோவை இதுவரை இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். ஆனந்த மஹிந்திரா பதிவு வைரல் ஆனதை அடுத்து, பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர். சிலர் இதே போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் செயல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

சாத்தியமற்றது:

வழக்கம் போல ஒரு சார்பு பயனர்கள், இது போன்ற சம்பவங்கள் இந்திய சாலைகளில் சாத்தியமற்றது என கருத்து தெரிவித்தனர். இந்த வீடியோ ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட பல்வேறு நகைச்சுவை வீடியோக்களுடன் இணைந்து கொள்கிறது. இதை தவிர இதற்கும் மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மொபிலிட்டி திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது. மஹிந்திரா நிறுவனம் இ மொபிலிட்டி பிரிவில் களமிறங்கும் வகையில் ஆயத்த பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

வரும் வாரங்களில் மஹிந்திரா நிறுவனத்தின் பார்ன் எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவை எதிர்கால மஹிந்திரா நிறுவன எலெக்ட்ரிக் வாகனங்களாக விற்பனைக்கு வர இருக்கின்றன. 

Follow Us:
Download App:
  • android
  • ios