இந்தியாவில் மீண்டும் களமிறக்கப்படும் Pulsar 220F... தொடங்கியது பைக்குக்கான முன்பதிவு!!
இந்திய சந்தையில் இருந்து நிறுத்தப்பட்ட பல்சர் 220F மாடலை பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் மீண்டும் களமிறக்குகிறது.
இந்திய சந்தையில் இருந்து நிறுத்தப்பட்ட பல்சர் 220F மாடலை பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் மீண்டும் களமிறக்குகிறது. பஜாஜ் ஆட்டோ லிமிடெட் கடந்த ஆண்டு பல்சர் 220F மாடலை நிறுத்தியது. 220F இன் வாரிசுகளாக கருதப்பட்ட பல்சர் F250 மற்றும் N250 ஆகியவற்றின் அறிமுகம் காரணமாக பல்சர் 220F இந்திய சந்தையில் இருந்து நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது இந்த பைக் மீண்டும் சந்தைக்கு வர தயாராகி வருவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. டீலர்ஷிப்கள் புதிய யூனிட்களைப் பெறத் தொடங்கியுள்ளன என்றும் கூறப்படுகிறது. சில டீலர்ஷிப்களும் புதிய 220F பைக்குக்கான மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க: மேம்படுத்தப்பட்ட என்ஜினுடன் வரும் ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார்... ரூ.30 ஆயிரம் வரை உயர்ந்தது காரின் விலை!!
மேலும் வரும் வாரங்களில் டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பல்சர் 220எஃப் மீண்டும் கொண்டுவருவதற்கான காரணத்தை நிறுவனம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இதற்கிடையில், பஜாஜ் ஆட்டோ பல்சர் 220F இல் பெரிய மாற்றங்களைச் செய்யாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் நிறுத்தப்படுவதற்கு முன்பு, அது BS6 வகையாக இருந்தது. எனவே, அதனை OBD2 வகையாக மாற்ற நிறுவனம் முயற்சி மேற்கொள்ளும் என தெரிகிறது. தற்போதைய இன்ஜின் 220சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-ஆயில் கூல்டு ஃப்யூல் இன்ஜெக்டட் யூனிட் ஆகும்.
இதையும் படிங்க: இந்தியா முழுவதும் 1000க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்கள்... அறிவித்தது ஏதர் எனர்ஜி!!
இது 8,500 ஆர்பிஎம்மில் 20.8 பிஎச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்மில் 18.5 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. ஐந்து வேக கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இதற்கிடையில், பஜாஜ் வரிசையிலிருந்து வெளியிடப்படும் சமீபத்திய பல்சர் பல்சர் பி150 மிகவும் மலிவு விலையில் புதிய தலைமுறை பல்சர் பைக்காக விளங்குகிறது. இந்த பைக் இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது. ஒன்று சிங்கிள் டிஸ்க்குடன் ரூ.1.17 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டூயல் டிஸ்க் மாடல் ரூ.1.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் உள்ளது.