மேம்படுத்தப்பட்ட என்ஜினுடன் வரும் ஹூண்டாய் வென்யூ என்-லைன் கார்... ரூ.30 ஆயிரம் வரை உயர்ந்தது காரின் விலை!!
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் வென்யூ என் - லைன் காரை மேம்படுத்தப்பட்ட என்ஜினுடன் களமிறக்கியுள்ளது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் வென்யூ என் - லைன் காரை மேம்படுத்தப்பட்ட என்ஜினுடன் களமிறக்கியுள்ளது. ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் இந்த புதிய காரில் பழைய டர்போ பெட்ரோல் என்ஜின் ரியல்-டிரைவ் எமிஷனுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்.1 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் BS6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்பிறகு அனைத்து வாகனங்களிலும் என்ஜின் வெளிப்படுத்தும் காற்று மாசு அளவை குறைக்கும் வகையில் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் BS6-ன் 2 ஆம் கட்ட மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. இதன் காரணமாக, தற்போது இருப்பதை காட்டிலும் BS6 இன் விதிமுறைகள் மேலும் மேம்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க: தல அஜித்துக்கே டஃப் கொடுத்த பதான் ஹீரோ.. சுசுகி ஹயபுசாவில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? அடேங்கப்பா.!!
என்ஜின் வெளிப்படுத்தும் மாசு அளவு ரியல்-டைம் ஆக தெரியப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை BS6-ன் 2 ஆம் கட்ட விதிமுறைகள் கொண்டுவர உள்ளன. இதனால் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப மீண்டும் என்ஜினை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் வாகன உற்பத்தியாளர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது BS6-ன் 2 ஆம் கட்ட விதிமுறைகள். இதன்படி கடந்த சில வாரங்களாக ரியல்-டிரைவ் எமிஷனுக்கு இணக்கமாக மேம்படுத்தப்பட்ட என்ஜின் உடன் பல்வேறு பிராண்ட்களின் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் வரிசையில் தற்போது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது வென்யூ என் லைன் காரின் டர்போ பெட்ரோல் என்ஜினை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது.
இதையும் படிங்க: R15 V4, MT 15, FZ-X ஆகிய பைக்குகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது Yamaha நிறுவனம்!!
ஹூண்டாய் வென்யூ என் லைன் காரின் 1.0 லிட்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் பெடில் ஷிஃப்டர்களை கொண்ட 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. என்ஜின் அப்டேட் மட்டுமின்றி புதிய வென்யூ என் லைன் காரில் ஐடியல் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்தக்கூடிய இந்த ஐடியல் ஸ்டாப்/ ஸ்டார்ட் வசதி ஆனது நெரிசல் மிகுந்த போக்குவரத்துகளில் தினந்தோறும் பயணிப்பதற்கு உகந்ததாக இருக்கும். இந்த கூடுதல் அம்சங்கள் காரணமாக வென்யூ என் லைன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.