MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • தல அஜித்துக்கே டஃப் கொடுத்த பதான் ஹீரோ.. சுசுகி ஹயபுசாவில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? அடேங்கப்பா.!!

தல அஜித்துக்கே டஃப் கொடுத்த பதான் ஹீரோ.. சுசுகி ஹயபுசாவில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? அடேங்கப்பா.!!

சுசுகி ஹயபுசா மாடல் பைக்குகள் ப்ரீமியம் வெர்சனில் இந்தியாவில் கிடைக்கிறது. நடிகர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை பலரும் இந்த பைக்குக்கு ரசிகர்களாக உள்ளனர்.

2 Min read
Raghupati R
Published : Feb 14 2023, 06:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25 ஆம் தேதி வெளியான இந்திப் படம், பதான் ஆகும். இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். பேஷரம் ரங் பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது. பல எதிர்ப்புகளை மீறி பதான் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.

26

கடந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடித்த படம் என்பதால், ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து வருகின்றனர். முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளியது. இப்படம் 8 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் ரூ.667 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

36

தற்போது வரை ரூ.924 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் படம் ரூ.476 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜான் ஆபிரஹாம் சுசுகி ஹயபுசா (Suzuki Hayabusa) பைக்கை வாங்கி அசத்தியுள்ளார்.

46

சுசுகி ஹயபுசா மாடல் பைக்குகளை வைத்திருக்கும் ஜான் ஆபிரகாம் இப்போது 2023 புதிய மாடல் சுசூகி ஹயபுஸா பைக்கை 16.4 லட்சம் ரூபாய்க்கு (எக்ஸ் ஷோரூம்) வாங்கியுள்ளார். இந்தியாவில் முதல் முதலாக வாங்கியவர்களில் இவரும் ஒருவர் ஆவார். பதான் பட வெற்றிக்கு பிறகு இந்த பைக்கை வாங்கியுள்ளார். 

56

சுசுகி ஹயபுசா பைக்கில் 1340cc 4 சிலிண்டர் என்ஜின் உள்ளது. இதன் பவர் 190BHP மற்றும் டார்க் 150NM ஆகும். இதில் அலுமினியம் சஸ்பென்ஸன் பிரேம், Brembo Stylema பிரேக் கேலிபேர், Bridgestone Battlax S22 டயர்கள் உள்ளது. இந்த பைக் Metallic Thunder மற்றும் Candy Grey என இரு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

66

டெக்னாலஜி அம்சங்களாக லான்ச் கண்ட்ரோல், கிருஸ் கண்ட்ரோல், Cornering ABS, ஹில் ஹோல்டு கண்ட்ரோல், TFT டிஸ்பிலே போன்ற வசதிகள் உள்ளது. இவரிடம் இதேபோன்று Yamaha V Max, Honda CBR1000RR-R, Yamaha YZF-R1, Ducati Panigale போன்ற பல உயர் ரக ப்ரீமியம் பைக்குகள் உள்ளன.இந்தியாவில் பிரீமியம் செக்மென்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அஜித் குமார்
சுசூகி மோட்டார் சைக்கிள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved