Today Rasi Palan : செப்டம்பர் 27, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

பொதுவான பலன்கள்:

விருச்சிக ராசி நேயர்களே, இந்த நாள் உங்கள் முழு சக்தியையும் பயன்படுத்தும் நாளாக அமையும். நீங்கள் ஒரு வேலையை தெளிவான நோக்கத்துடன் தேர்ந்தெடுத்து, அதை கவனத்துடன் செயல்படுத்தி முடித்துக் காட்டுவீர்கள். இன்று உங்கள் செயல்கள் ஒளிரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறிய வெற்றியைக் கூட அங்கீகரித்துக் கொண்டாடுவது, உங்களை பலப்படுத்தும். உங்கள் தனிப்பட்ட வளர்ச்சி அதிகரிக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நிதி நிலைமை:

செலவுகளை கவனமாக திட்டமிட்டு கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நிதி நிலையை பாதுகாக்க உதவும். நிதி நிலைமையில் நிலையான வளர்ச்சிக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த கால முதலீடுகளில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கலாம். கடன் வாங்குதல் கொடுத்தலை இந்த நாளில் தவிர்த்து விடுங்கள். பண விஷயங்கள் குறித்து பேசும் பொழுதும், முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுதும் அவசரம் வேண்டாம். புதிய வருமான மூலம் பண வரத்து அதிகரிக்கும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

உறவுகளில் ஆழமான புரிதல் மற்றும் அர்ப்பணிப்பு அதிகரிக்கும். வெளிப்படையான நேர்மையான உரையாடல்கள் உறவை பலப்படுத்தும். உணர்ச்சிபூர்வமான இணைப்புகள் என்று தீவிரமடையும். புதிய உறவுகள் உருவாகும் வாய்ப்புகள் ஏற்படலாம். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் வலுவான மற்றும் துணிச்சலான அணுகுமுறை இருக்கும். இருப்பினும் வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது.

பரிகாரங்கள்:

முருகப்பெருமானை வழிபடுவது நன்மை தரும். கந்தபுராணம், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். மனதில் இருக்கும் கோபங்கள் மற்றும் மோதல்களை குறைப்பதற்கு தியானம் செய்யுங்கள். முருகப் பெருமானுக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபடுங்கள். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.