Today Rasi Palan : அக்டோபர் 03, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
விருச்சிக ராசி நேயர்களே, இன்று உங்கள் இலக்குகள் மீது தீவிர கவனம் செலுத்துவீர்கள். மனதின் அலைபாயும் தன்மை குறைந்து, வேலையில் அதிக ஒழுக்கத்துடனும், கவனத்துடனும் செயல்பட்டு வெற்றியை ஈட்டுவீர்கள். உங்கள் லட்சியங்களை நோக்கி முன்னேறிச் செல்வீர்கள். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும்.
நிதி நிலைமை:
நிதி சார்ந்த விஷயங்கள் இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிதி நிலைமை ஸ்திரத்தன்மையுடன் விளங்கும். பழைய கடன்களை அடைப்பது, தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் அவசரப்படாமல் நிதானமாக செயல்படவும். இன்று எதிர்பாராத வகையில் பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
தனிப்பட்ட வாழ்க்கை:
உறவுகளில் உறவுகளில் ஆதிக்கம் செலுத்துவதை கைவிட்டு நேர்மையுடனும், உண்மையுடனும் இருப்பீர்கள். இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவழிப்பீர்கள். வீட்டை பராமரிப்பது வீட்டு மராமத்து ஆகிய பணிகளை மேற்கொள்வீர்கள். குழந்தைகள் மூலம் சுப செய்திகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.
பரிகாரங்கள்:
- வீட்டின் அருகில் இருக்கும் சித்தர்கள் கோவில் அல்லது ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபடுங்கள்.
- அமைதியான இடம் அல்லது தியான மண்டபங்களில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள்.
- வெள்ளிக்கிழமை என்பதால் அம்பிகை வழிபாடு நல்ல பலன்களைத் தரும்.
- ஏழை எளியவர்களுக்கு உதவுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
