Today Rasi Palan : செப்டம்பர் 27, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் புதிய வாய்ப்புகளும், ஒத்துழைப்புகளும் தேடி வரும். எதிர்காலத்தை பற்றி சிந்திப்பதை விட நிகழ்காலத்தில் முழுமையாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உங்கள் முடிவெடுக்கும் திறன் மேம்படும். மனதில் தெளிவும், ஆற்றலும் பிறக்கும். உங்களின் இயல்பான சமநிலை மற்றும் இணக்க உணர்வு இன்று உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.
நிதி நிலைமை:
நிதி நிலைமை இன்று அபரிமிதமாக இருக்கும். வளர்ச்சிக்கும், நிதி பாதுகாப்புக்கும் அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பம் அல்லது முதலீடுகள் போன்ற விஷயங்களுக்காக செலவு செய்வீர்கள். இருப்பினும் அவை கட்டுக்குள் இருக்கும். நிதி சீரமைப்பு மற்றும் பழைய முதலீடுகளை மறு பரிசீலனை செய்ய நல்ல நேரம். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலம் நிதி சமநிலையை பராமரிக்கலாம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
உங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒத்துழைத்து செல்வது அமைதியான மற்றும் மகிழ்ச்சியான நாளை உறுதி செய்யும். நண்பர்களுடன் பேசுவது மனதிற்கு மகிழ்ச்சியும் சுறுசுறுப்பையும் அளிக்கும். வாழ்க்கைத் துணையுன் மனம் விட்டு பேசுவதன் மூலம் பிணைப்பு அதிகரிக்கும். உங்கள் வார்த்தைகள் குடும்பத்தினருக்கு அன்பானதாகவும், ஆறுதல் அளிப்பதாகவும் இருக்கும். பெற்றோர் வழியிலிருந்து ஆதரவு கிடைக்கும்.
பரிகாரங்கள்:
இன்றைய நாள் ஹயக்ரீவர் அல்லது வராஹ மூர்த்தியை வழிபடுங்கள். தடைகள் நீங்கி வெற்றி கிடைக்க இறைவனுக்கு துளசி மாலை சாற்றுங்கள். வாயில்லா ஜீவன்களுக்கு உணவளியுங்கள். பறவைகள் பசியாறுவதற்கு உணவும், தண்ணீரும் கொடுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.


