Daily Rasipalan Tamil : நெருப்புடா!! தொட்டாலே சுர்ரென்று கோபம் வரும் ரக்கட் பசங்க எந்த ராசிக்காரங்க தெரியுமா?

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே ஒரு குணம் உண்டு. மனிதர்களின் குணத்தை தீர்மானிப்பதில் ராசிகளுக்கும் அந்த ராசிகளில் அமர்ந்திருக்கும் நவ கிரகங்களுக்கு பங்கு இருக்கிறதாம். நீங்க எந்த ராசியோ? உங்கள் ராசிநாதன் யாரோ அவர்தான் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை தீர்மானிப்பதாக ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. ரக்கட் ஆக எதையும் அதிரடியாக முடிவு செய்வீர்களா? அல்லது அமைதியாக கடந்து போவீர்களா? எந்த ராசிக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள் என பார்க்கலாம்.

Tamil astrology News: Mesham - Simmam - Dhanusu zodiac sign Characters

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளில் நீர், நெருப்பு, நிலம், காற்று என நான்கு வகையாக உள்ளன. சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி எனவும் ராசியினை பிரித்து வைத்துள்ளனர். 12 ராசிகளையும் நவகிரகங்கள் ஆட்சி செய்கின்றன. ராசிகளின் தன்மைக்கு ஏற்ப குண நலன்களும் மாறுபடும் என ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு ராசிகளில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என முதலில் பார்க்கலாம்.

நெருப்பு ராசிக்காரர்கள்:

மேஷம், சிம்மம் தனுசு ஆகிய மூன்று ராசிகளில் பிறந்தவர்கள் நெருப்பு ராசிக்காரர்கள். எதையும் உடனே செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நினைத்ததை முடித்துக்காட்டுபவர்கள். வேகத்தோடு விவேகமாகவும் செய்து முடிப்பார்கள் ஆசைப்பட்ட எதையும் அதற்கேற்ப காய் நகர்த்தி வெற்றிகரமாக முடித்துக்காட்டுவார்கள். ஆவேசம், ஆக்ரோஷம், அவசரம் என சில நேரங்களில் யோசிக்காமல் முடிவு செய்வார்கள். இவர்களின் அவசர புத்தியே சில நேரங்களில் தோல்விக்கு காரணமாகிவிடும். அதுவே எடுத்த காரியத்தை அரைகுறையாக முடிக்க காரணமாகிவிடும். யாராவது இவர்களை சீண்டினார்கள் என்றால் உடனடியாக இவர்களுக்கு கோவம் வந்துவிடும். சுயமரியாதைக்கு சுய கௌரவத்திற்கு இவர்கள் அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள் யாராவது இவர்களுடைய சுயமரியாதை சீண்டினார்கள் என்றால் இவர்களுக்கு அது பிடிக்காது.

சுக்கிரன் பெயர்ச்சி 2024 : கடகத்தில் பயணிக்கும் காதல் நாயகன்.. 4 ராசிக்காரர்களுக்கு கல்யாண வைபோகம்!!

மேஷம்: ரத்த காரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்கள் இயற்கையிலே கொஞ்சம் ரக்கட் ஆன ஆட்கள்தான். சுர்ரென்று தொட்டதற்கு எல்லாம் மூக்கிற்கு மேல் கோபம் தான் வரும். கோபம் இருக்கும் இடத்தில் தானே குணம் இருக்கும். எதையும் தைரியத்தோடும் நம்பிக்கையுடனும் செய்து முடிப்பவர்கள். வெற்றி பெறுவது ஒன்றையே லட்சியமாக கொண்டிருப்பவர்கள்.  நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பவர்கள். உங்கள் கோபம் பலரையும் சுட்டெரித்து விடும் நெருப்பு போன்றது.

சிம்மம்:  நெருப்பான சூரியனை ஆட்சி நாயகனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு சுள்ளென்று கோபம் வந்தால் எதிராளிகளை வள்ளென்று கடித்து குதறிவிடுவார்கள். கோபப்படும் நேரங்களில் இவர்களை விட்டு சில அடிகள் தள்ளி இருப்பதே நல்லது.  அதிகாரத்தை உபயோகித்து காரியம் சாதிப்பதை விட சில நேரங்களில் அன்பாக  பேசி அதிகம் காரியம் சாதித்து காட்டுவீர்கள்.  நிர்வாகத் திறமை மிக்கவர்கள் இதனால் பலரது மனங்களில் இடம் பிடித்து விடுவீர்கள். கொடுத்து உதவும் தன்மை கொண்ட உங்களுக்கு வெளியில் செல்வாக்கு அதிகம் இருந்தாலும் வீட்டிற்குள் போராட்ட வாழ்க்கைதான் அமையும். உங்களுடைய கோபம் ஆக்கப்பூர்வமான நெருப்பாக இருக்கும்.

Osteoporosis: ஆஸ்டியோபோரோசிஸ்; எலும்பு பொல பொலன்னு; டக்குன்னு உடையும்; உங்க ஜாதகத்தை செக் பண்ணுங்க!!

தனுசு: குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் தெய்வ பக்தியோடு தேச பக்தியும் கொண்டவர்கள்.  வீரமும், விவேகமும் கொண்டவர்கள். வெளியில் சுதந்திர பறவைகளாகத் திரியும் இவர்களுக்கு வீட்டில் ஏதாவது ஒரு வகையில் நிம்மதியின்மை ஏற்படும்.  திருமணம் செய்யும் போது அதிக சிரத்தையும் கவனமும் கொள்ள வேண்டும். உங்கள் கோபம் தீபம் ஏற்ற பயன்படுத்தும் தீக்குச்சி போன்றது. கவரிமான் பரம்பரை என்று தான் உங்களைச் சொல்ல வேண்டும். எதற்காகவும் உங்கள் சுய கவுரவத்தையும் சுய மரியாதையையும் விட்டுத்தர மாட்டீர்கள். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios