Asianet News TamilAsianet News Tamil

சுக்கிரன் பெயர்ச்சி 2024 : கடகத்தில் பயணிக்கும் காதல் நாயகன்.. 4 ராசிக்காரர்களுக்கு கல்யாண வைபோகம்!!

சுக்கிரன் பெயர்ச்சி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு கடந்த ஏழாம் தேதி இடப்பெயர்ச்சியாகியுள்ளார். சுக்ரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். சுக்கிரனின் இடப்பெயர்ச்சியும் பார்வையும் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் புதுவித மாற்றத்தை ஏற்படுத்தும். சிலரும் திடீர் அதிர்ஷ்டமும் பண வரவும் கிடைக்கும். இந்த சுக்கிர பெயர்ச்சியால் யாருக்கு கல்யாண வைபோகம் கூடி வரும் என்று பார்க்கலாம்.

Sukran Peyarchi Palan 2024: Venus Transit in Cancer from July 7 Know Its Effects
Author
First Published Jul 10, 2024, 9:06 AM IST

சுக்கிரன் பெயர்ச்சி பலன்: சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம்.  இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். இந்த சுக்கிர பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் சுக்கிர திசை அடிக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: சுக ஸ்தானமான 4வது வீட்டில் சுக்கிரன் அமர்ந்து உள்ளதால் வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள்.  சுக்கிரன் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது விழுவதால் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். சுக்கிரதிசையும் கைகூடி வரும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்தில் பால் வாங்கி கொடுக்கலாம்.

மிதுனம்: உங்கள் ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில்  பயணம் செய்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும்.  கணவன் மனைவிக்கு இடையேயான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வெள்ளிக்கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று வெண்ணெய் வாங்கி தந்து வழிபட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

குலதெய்வம் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..?

கடகம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் பயணம் செய்வதால் நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.  வாரம் ஒருநாள் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று மல்லிகை, முல்லை பூக்களை வைத்து வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும்.

கன்னி: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால்  பண வருமானம் அதிகாிக்கும்.  அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். திருமணம் கைகூடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை சுக்கிரபகவானுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

துலாம்: உங்கள் ராசிக்கு 10வது வீட்டில்  தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் பயணம் செய்கிறார். உங்கள் வேலையில், தொழிலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.  குடும்பத்தில் மனைவியுடனோ அல்லது காதலியுடனோ சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள்.வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளிடம் பேசும் போது அமைதியாகவும் நிதானமாகவும் பேசவும்.

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தவறுதலாக கூட இதுபோன்ற செயல்களை செய்யாதீங்க..! மீறினால் அவ்ளோதான்..!!
 

தனுசு: உங்கள் ராசிநாதன் சுக்கிரன்  எட்டாவது வீட்டில் மறைவதால்  விலை உயர்ந்த பொருள், நகை, பணத்தை பத்திரப்படுத்துங்கள் விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம் வாகன பயணங்களில் கவனம் தேவை.  வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு அகத்திக்கீரையை தானம் கொடுக்கலாம்.

கும்பம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் சண்டை சச்சரவுகள் வரலாம் அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்கவும். பசுவிற்கு அரிசி மாவும், வெல்லமும் தானமாக அளிக்க நன்மைகள் நடைபெறும்.

மீனம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில்  பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால்  வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் விளக்கேற்றி வர நன்மைகள் அதிகரிக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios