This Week Rasi Palan: அக்டோபர் 13 முதல் அக்டோபர் 19 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

பொதுவான பலன்கள்:

  • கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதிய உத்வேகம், தெளிவு, அர்த்தமுள்ள மாற்றங்கள் கிடைக்கும் வாரமாக இருக்கும். 
  • உங்கள் படைப்பாற்றல் அதிகரிக்கும். 
  • சமூகம் மற்றும் அறிவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் செலுத்துவீர்கள். 
  • அதே நேரத்தில் பொறுப்புகளை கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம். 
  • இந்த வாரம் இலக்குகளை நோக்கி மெதுவாகவும், நிலையாகவும் முன்னேறுவது முக்கியம். அவசரம் காட்ட வேண்டாம். 
  • மனதில் ஒருவித தேக்க உணர்வு அல்லது முடிவெடுப்பதில் குழப்பம் இருந்தாலும் அமைதியாக இருப்பதன் மூலம் தெளிவு கிடைக்கும்.

ஆரோக்கியம்:

  • ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உடல்நலன் மேம்படும்.
  •  விளையாட்டு மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்பது இழந்த சக்தியை மீட்டு புதிய ஆற்றலை தரும். 
  • உடல் நலனில் அதிக கவனம் தேவை. 
  • வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். எனவே போதுமான தூக்கம் அவசியம். 
  • சீரான உணவு எடுத்துக் கொள்வது உடல் தகுதியை மேம்படுத்தும். 
  • அமைதியான மற்றும் எளிய உடற்பயிற்சிகளை செய்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நிதி நிலைமை:

  • நிதி நிலைமை இந்த வாரம் சாதகமாக இருக்கும். 
  • அதிக கடின உழைப்பு இல்லாமல் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். 
  • எதிர்பாராத செலவுகள் குறைவாக இருக்கும். இதன் காரணமாக பணத்தை சேமிப்பீர்கள். 
  • பண விஷயங்களில் அவசரப்படாமல் தெளிவாக சிந்தித்த பிறகு முடிவுகளை எடுப்பது நல்லது. 
  • குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய செலவுகள் செய்ய நேரிடலாம். 
  • புதிய வருமான வழிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. 
  • நிலுவையில் உள்ள கடன்கள் அல்லது பழைய கடன்களை தீர்ப்பதற்கு இது நல்ல நேரமாகும்

கல்வி:

  • இந்த வாரம் சில பாடங்களை புரிந்து கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம். 
  • எனவே சக மாணவர்கள் அல்லது ஆசிரியரிடம் உதவி கேட்க தயக்கம் காட்டாமல் அவர்களின் உதவியை நாடுவது நல்லது. 
  • தாமதமின்றி உதவி கோருவது வரவிருக்கும் தேர்வுகளில் வெற்றி பெற உதவும். 
  • ஒழுங்கான அட்டவணையைப் பின்பற்றி சுய ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் கல்வியில் சிறந்து விளங்க முடியும். 
  • புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு ஆர்வம் ஏற்படும்.

தொழில் மற்றும் வியாபாரம்:

  • இந்த வாரம் தொழில் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். 
  • வேலை செய்து வருபவர்களுக்கு மேலதிகாரிகள் சக ஊழியர்களிடமிருந்து பாராட்டு மற்றும் ஆதரவு கிடைக்கும். 
  • சிலர் விரும்பிய பதவி உயர்வு அல்லது பொறுப்புகளைப் பெறலாம். 
  • சக ஊழியர்களுடனான உறவு இணக்கமாக இருக்கும். 
  • புதிய வணிக வாய்ப்புகள் உற்சாகமளிக்கும். 
  • வேலை அல்லது தொழில் மாறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். 
  • சிறிய பின்னடைவுகள் மற்றும் தாமதங்கள் ஏற்படலாம். இருப்பினும் அதையெல்லாம் எளிதாக வெற்றிக்கொண்டு முன்னேறிச் செல்வீர்கள்.

குடும்ப உறவுகள்:

  • குடும்பப் பிரச்சனைகள் இந்த வாரம் உங்கள் மனதை ஆக்கிரமிக்கலாம். 
  • நீங்கள் செய்யும் வேலையை அது கெடுக்கலாம். 
  • வீட்டுப் பிரச்சனைகள் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கலாம். 
  • வாழ்க்கைத் துணையுடன் சிறு மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. 
  • திருமணம் குறித்த முடிவுகள் எடுப்பதற்கு முன்னர் முழுமையாக விசாரித்து எடுப்பது நல்லது. 
  • உறவில் பிணைப்பை ஆழப்படுத்த பொறுமை அவசியம். 
  • இந்த வாரம் வீட்டு மராமத்து, வீட்டை புதுப்பிக்க அல்லது அலங்கரிக்க முடிவுகளை எடுப்பீர்கள்.

பரிகாரம்:

  • இந்த வாரம் முழுவதும் மாலையில் துளசி செடிக்கு அருகில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
  •  இது குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும். விஷ்ணு பகவான் ஆலயங்களுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபடலாம். 
  • சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் தானம் செய்யுங்கள். 
  • அருகில் உள்ள கோயிலில் கடுகு எண்ணெயை தானம் செய்வது அதிர்ஷ்டத்தைக் கூட்டும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)