2025ல் கோடீஸ்வரர்களாக ராஜ வாழ்க்கை வாழப் போகும் ராசிக்காரங்க யாரெல்லாம் தெரியுமா?
2025 Horoscope Prediction in Tamil: 2025 ஆம் ஆண்டு யாருக்கெல்லாம் கோடீஸ்வர யோகம் உண்டாகும் என்று நோஸ்ட்ராடாமஸ் கூறியிருக்கிறார். அதைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
பிரெஞ்சு ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ் பல உண்மையான கணிப்புகளைச் சொல்லியுள்ளார். அதில் பல வகையான கணிப்புகள் உண்மையாகியுள்ளன. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதையும் அவர் கணித்துள்ளார். அவரது கணிப்பின்படி, 2025 ஆம் ஆண்டு இந்த 7 ராசிகளுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். அந்த ராசியினர் யாரெல்லாம் என்று பார்க்கலாம்.
மேஷம் ராசிக்கு 2025 புத்தாண்டு பலன்:
மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு துணிச்சலும் உறுதியும் நிறைந்ததாக இருக்கும். புதிய உத்வேகத்துடன் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. எதையும் திட்டமிட்டு செயல்பட்டால் நிதி நிலைத்தன்மையும் வளமும் பெறலாம்.
ரிஷபம் ராசிக்கு 2025 புத்தாண்டு பலன்:
ரிஷப ராசிக்காரர்கள் இயற்கையிலேயே கடின உழைப்பாளிகள் மற்றும் உறுதியானவர்கள். வாய்ப்புகள் வரும்போது உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழில், வியாபாரம், நீண்டகால முதலீடுகளுக்கு இந்த ஆண்டு சிறந்தது. பாதுகாப்பும் நிலைத்தன்மையும் தேவைப்படுபவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும் ஒரு அற்புதமான வருடமாக இருக்கும்.
மிதுனம் ராசிக்கு 2025 புத்தாண்டு பலன்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இது நிலையான, ஆக்கப்பூர்வமான மற்றும் நிதி முன்னேற்றம் உள்ள ஆண்டாக இருக்கும். உங்கள் ஆர்வமும் புத்திசாலித்தனமும் உங்களை புதிய பாதையில் அழைத்துச் செல்லும். எச்சரிக்கையுடன் முடிவுகளை எடுங்கள். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். அப்போதுதான் நிதி ரீதியிலான வெற்றி உங்களை தேடி வரும்.
சிம்மம் ராசிக்கு 2025 புத்தாண்டு பலன்:
இந்த ராசிக்காரர்கள் இயற்கையிலேயே தன்னம்பிக்கை உடையவர்கள். ஆக்கப்பூர்வமான சிந்தனை அவர்களின் நிதி வெற்றிக்குக் காரணமாகும். நல்ல முதலீடுகளைச் செய்யலாம். சரியான திட்டமிடல் நிதி வெற்றிக்கு வழிவகுக்கும்.
துலாம் ராசிக்கு 2025 புத்தாண்டு பலன்:
இந்த ராசிக்காரர்கள் சமநிலை மற்றும் வளத்திற்காக இந்த ஆண்டை நினைவில் கொள்வார்கள். கடின உழைப்பின் மூலம் வெற்றி பெறுவார்கள். நிதி நிலையில் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம். இந்த ஆண்டு உங்கள் கனவுகள் நனவாகும் ஒரு அற்புதமான வருடமாக இருக்கும்.
மகரம் ராசிக்கு 2025 புத்தாண்டு பலன்:
இந்த ராசிக்காரர்கள் எப்போதும் கடின உழைப்பாளிகள். பொறுமையும் உறுதியும் பலன் தரும். புதிய சவால்கள் வரும். ஆனால் சவால்களை ஏற்கத் தயங்கினால் உங்களுக்கு தான் கஷ்டம் வரும். சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
மீனம் ராசிக்கு 2025 புத்தாண்டு பலன்:
இந்த ராசிக்காரர்களுக்கு 2025ஆம் ஆண்டு ஆன்மீக எழுச்சி உள்ள ஆண்டாக இருக்கும். அவர்களின் ஆன்மீக வாழ்க்கை வலுப்பெறும். நிஜமும் கற்பனையும் சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் பொறுமையும், தன்னம்பிக்கையும் உங்களுக்கு அனைத்து தடைகளையும் கடக்க உதவும்.