Today Rasi Palan : அக்டோபர் 08, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்: மகர ராசி நேயர்களே, இன்று நீங்கள் தெளிவாகவும் ஆக்கபூர்வமான முடிவுகளையும் எடுப்பீர்கள். வேலையில் கூடுதலை பொறுப்புகளை ஏற்கச்சொல்லி உங்களை மேலதிகாரிகள் வற்புறுத்தக்கூடும். எல்லாவற்றிற்கும் சம்மதிக்காமல் முக்கிய பணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுங்கள். அனைவரிடமும் அனுசரித்துச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. உங்கள் தனிப்பட்ட நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். யாருக்கும் தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். நிதி நிலைமை: நிதி சார்ந்த விஷயங்களில் முடிவுகளை எடுக்கும் பொழுது கவனத்துடன் செயல்படுங்கள். உங்கள் நிதி ஸ்திரத்தன்மையை செலவழித்து பிறருக்கு நல்லவர் என்று காட்டிக் கொள்வதை தவிர்க்கவும். இன்று நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு பெரிய தொகையை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. சிறிய அளவிலான சேமிப்பு இழப்புகள் இருந்தால் அவற்றை அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். உங்கள் பட்ஜெட்டிற்கு மீறிய செலவுகளை செய்ய வேண்டாம். தனிப்பட்ட வாழ்க்கை: இன்று உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுங்கள். ஏதேனும் மனக்கசப்புகள் இருந்தால் அதை தெளிவாக பேசி புரிய வையுங்கள். அமைதி காப்பது மனக்கசப்பை மேலும் அதிகப்படுத்தலாம். து ணையிடம் கோபத்துடன் பேசாமல், தெளிவுடன் பேசி பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்வீர்கள். திருமணமானவர்கள் குடும்ப பிரச்சினையில் மூன்றாம் நபர் தலையீடு செய்வதை தவிர்த்து விடுங்கள். அவசரப்படாமல், வார்த்தைகளில் கவனத்துடன் பேசுங்கள். பரிகாரங்கள்: மகர ராசியின் அதிபதியான சனி பகவானை இன்றைய நாளில் வணங்குவது சிறந்தது. தடைகள் நீங்க விநாயகரை வழிபடுவது நன்மை தரும். தண்ணீர், சர்க்கரை, நெய், பால் ஆகியவற்றை கலந்து அரச மரத்தின் வேருக்கு வழங்குவதால் பொருளாதார செழிப்பு அதிகரிக்கும். இயலாதவர்கள் ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நன்மைகளை அதிகரிக்கும். முக்கிய குறிப்பு: இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
Read Full Article