- Home
- Astrology
- Astrology: இந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் தலைவி ஆவதற்கு பிறந்தவர்களாம்.! ஆண்களை விட அதிக மனவலிமை கொண்டவர்களாம்.!
Astrology: இந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் தலைவி ஆவதற்கு பிறந்தவர்களாம்.! ஆண்களை விட அதிக மனவலிமை கொண்டவர்களாம்.!
women zodiac signs who make the best leaders: சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயற்கையிலேயே தலைமைப் பண்பு மிக்கவர்களாகவும், ஆண்களைவிட அதிகமான வலிமை கொண்டவர்களாகவும் விளங்குவார்களாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தலைமைப் பண்பு கொண்ட ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணங்கள் உள்ளன. சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களை ஆளும் கிரகங்கள் காரணமாக தலைமைப் பண்புகளில் மிளிர்கின்றனர். இவர்கள் அதிக திறமை, உறுதியான மனநிலை மற்றும் புத்திசாலித்தனத்தால் எந்த சூழலிலும் முன்னேறிச் செல்கின்றனர். மேலும் இவர்கள் சமூகத்தில் சிறந்த தலைவர்களாகவும் விளங்குகின்றனர். அந்த நான்கு ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1.மேஷம்
மேஷ ராசி என்பது செவ்வாய் பகவானால் ஆளப்படும் ராசியாகும். செவ்வாய் பகவான் ஆற்றல்ஔ உற்சாகம், தைரியம், தன்னம்பிக்கை ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். மேஷ ராசிப் பெண்கள் தைரியமும், உற்சாகமும் நிறைந்தவர்கள். இவர்கள் மன உறுதியுடன், சிறந்த முடிவெடுக்கும் திறன் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இதன் காரணமாக இவர்கள் இயல்பாகவே தலைவர்களாக விளங்குகின்றனர்.
புதிய யோசனைகளை முன்மொழிந்து அவற்றை செயல்படுத்துவதில் மேஷ ராசியைச் சேர்ந்த பெண்கள் வல்லவர்கள். இவர்களின் தன்னம்பிக்கை மற்றவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. எத்தனை சவால்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் துணிச்சல் மேஷ ராசிப் பெண்களிடம் காணப்படுகிறது.
2. சிம்மம்
சிம்ம ராசிப் பெண்கள் சூரிய பகவானால் ஆளப்படுபவர்கள். சூரிய பகவான் இவர்களுக்கு தலைமைப் பண்புகளையும், கம்பீரமான ஆளுமையையும் வழங்குகிறார். இவர்களின் தலைமைப் பண்பு மற்றவர்களை ஈர்க்கும் விதத்தில் வெளிப்படுகிறது. இவர்கள் ஒரு குழுவை ஒருங்கிணைத்து அனைவரையும் ஒரே இலக்கை நோக்கி வழிநடத்துவதில் வல்லவர்களாக உள்ளனர்.
சிம்ம ராசியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் பணியில் உறுதியாக இருப்பதோடு, மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் செயல்படுகின்றனர். மேலும் சிங்கத்தைப் போலவே குணம் படைத்திருப்பதால் தீய எண்ணத்துடன் இவர்களை யாரும் அவ்வளவு எளிதில் நெருங்கி விட முடியாது.
3. விருச்சிகம்
விருச்சிக ராசியைச் சேர்ந்த பெண்களும் செவ்வாய் பகவானால் ஆளப்படுபவர்கள். விருச்சிக ராசி பெண்கள் உறுதியான மன உறுதியும், ஆழமான உணர்வுகளுக்கும் பெயர் பெற்றவர்கள். இவர்கள் தீவிரமான அணுகுமுறை மற்றும் புத்திசாலித்தனமான முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள். இதன் காரணமாக இவர்கள் சிறந்த தலைவர்களாக மாறுகின்றனர்.
எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதை ஆழமாக ஆராய்ந்து, அதற்கு சரியான தீர்வை காண்பதில் விருச்சிக ராசி பெண்கள் தனித்து விளங்குகின்றனர். இவர்களின் உறுதியும், கடின உழைப்பும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது.
4. மகரம்
மகர ராசியைச் சேர்ந்த பெண்கள் சனி பகவானால் ஆளப்படுபவர்கள். சனி பகவான் இவர்களுக்கு ஒழுக்கம், பொறுமை, நீதி ஆகியவற்றை அளிக்கிறார். இதன் காரணமாக இவர்கள் அதீத ஒழுக்கத்துடனும், பொறுப்புணர்வும் நிறைந்தவர்களாக விளங்குகின்றனர். இவர்களின் திட்டமிடும் திறனும், இலக்குகளை அடையும் உறுதியும் இவர்களை மிகச் சிறந்த தலைவர்களாக உயர்த்துகிறது.
மகர ராசிப் பெண்கள் தங்கள் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதோடு, ஒரு குழுவை ஒருங்கிணைத்து வெற்றியை நோக்கி வழிநடத்திச் செல்வார்கள். இவர்களின் பொறுமையும், நிதானமும் எந்த ஒரு சவாலையும் வெற்றி தரமாக கையாள உதவுகிறது.
தலைமைப் பண்பு கொண்டவர்கள்
மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளைச் சேர்ந்த பெண்கள் தங்களது தனித்துவமான குணங்களால் தலைமைப் பண்புகளில் சிறந்து விளங்குகின்றனர். இவர்களின் தைரியம், உறுதி மற்றும் புத்திசாலித்தனம் இவர்களை எந்த துறையை எடுத்தாலும் அதில் முன்னணி தலைவர்களாக உயர்த்துகிறது. இவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மற்றவர்களுக்கும் உத்வேகம் அளிக்கின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)