Today Rasi Palan : அக்டோபர் 03, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்புடனும் இலக்குகளை அடையும் முனைப்புடனும் செயல்படுவீர்கள். பணியிடம் அல்லது வீட்டில் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்றுவீர்கள். இதன் காரணமாக இன்று உங்களுக்கு பாராட்டு மழை குவியலாம். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் குழப்பங்கள் அல்லது தாமதங்கள் ஏற்படலாம். எனவே நிதானமாக செயல்படுவது அவசியம்.

நிதி நிலைமை:

இன்றைய தினம் நீண்ட கால முதலீடுகள் பற்றி சிந்திப்பதற்கு நல்ல நாளாகும். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். அத்தியாவசியமற்ற அல்லது அதிக செலவுகளை தவிர்க்க வேண்டும். பண விஷயங்களில் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தொழில் ரீதியாகவோ அல்லது வேலையிலோ நீங்கள் எதிர்பார்த்த லாபம் அல்லது ஊக்கத்தொகை கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று குடும்ப உறவில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். வீட்டில் அமைதி நிலவும். உறவுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். திருமணமானவர்கள் துணையின் உறவுகளை புரிந்து கொண்டு நடப்பீர்கள். இது உறவை மேலும் வலுப்படுத்தும். வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். எனவே போதுமான ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம்.

பரிகாரங்கள்:

  • உங்கள் ராசியின் அதிபதியான சனிபகவானை வழிபடுவது நல்லது. 
  • ஆஞ்சநேயர் அல்லது விநாயகர் வழிபாடு காரியங்களில் உள்ள தடைகளை நீக்கும். 
  • முடிந்தால் எள், நல்லெண்ணெய், கருப்பு நிறப் பொருட்களை தானம் செய்யலாம். 
  • எந்த வேலையை தொடங்குவதற்கு முன்னரும் உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதார வணங்கிக் கொள்ளுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.