Today Rasi Palan : அக்டோபர் 02, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

பொதுவான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, இன்று நீங்கள் புதிய உற்சாகத்துடன் இருப்பீர்கள். நீங்கள் இருக்கும் இடமே மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உங்கள் வெற்றியால் திருப்தி அடைவீர்கள். புதிய வேலைகள் குறித்து நம்பிக்கையுடன் இருப்பீர்கள். இன்று உங்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பொறுப்புணர்வு மற்றும் கடமைகளில் கவனம் செலுத்தி இலக்குகளை அடைவீர்கள்.

நிதி நிலைமை:

உங்கள் உடன் பிறந்தவர்களின் உதவி காரணமாக நிதி நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகம் செய்து வருபவர்கள் பயணத்தின் மூலம் பெரிய நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். முதலீடுகள் அல்லது நிதி முடிவுகள் எடுப்பதற்கு முன்னர் குடும்பத்தினர் அல்லது உடன் பிறந்தவர்களின் ஆலோசனையைப் பெற்று செயல்படுவது நல்லது.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க குடும்பத்தினர் சில முயற்சிகளை மேற்கொள்வார்கள். குடும்ப சூழல் அமைதியாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் அனைத்தும் நடைபெறும். இதன் காரணமாக மன மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நல்லுறவைப் பேணுவீர்கள்.

பரிகாரங்கள்:

  • சிவ வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மைகளைத் தரும். 
  • சிவாலயங்களுக்கு சென்று இறைவனை மலர்களால் அர்ச்சித்து தீபம் ஏற்றி வழிபடுங்கள
  • கோயில் மண்டபங்களில் அமர்ந்து தியானம் செய்வது மன அமைதிக்கு உதவும். 
  • ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். 
  • அன்னதானம் கொடுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.