- Home
- Astrology
- Astrology: இந்த 5 ராசி பெண்கள் பிளே பாய்களை துரத்தி துரத்தி காதலித்துவிட்டு பின்னர் கஷ்டப்படுவாங்களாம்.! உங்க ராசி இருக்கா?
Astrology: இந்த 5 ராசி பெண்கள் பிளே பாய்களை துரத்தி துரத்தி காதலித்துவிட்டு பின்னர் கஷ்டப்படுவாங்களாம்.! உங்க ராசி இருக்கா?
Zodiac signs will fall for fake relationships: சில ராசிகளைச் சேர்ந்தவர்கள் எப்போதும் தவறான ஆட்களை காதலித்து விட்டு பின்னர் கஷ்டப்படுவார்களாம். அந்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பிளே பாய் ஆண்களை காதலிக்கும் பெண்கள்
தற்போதைய காலத்தில் செய்திகளில் காதலில் ஏமாற்றுபவர்கள் குறித்து அடிக்கடி கேள்விபடுவது உண்டு. காதலில் ஏமாறுபவர்களுக்கு பாலின வேற்றுமை கிடையாது. இருப்பினும் சில பெண்கள் திரைப்படங்களில் காட்டப்படுவது போல பிளே பாய் ஆண்களிடம் எளிதில் காதலில் விழுகிறார்கள். அனைத்து பெண்களும் இது போல் பிளே பாய் ஆண்களிடம் காதலில் மயங்குவதில்லை என்றாலும், சில ராசிகளில் பிறந்த பெண்கள் காதலில் பலவீனமாக இருப்பார்கள். இவர்கள் இது போன்ற மோசமான ஆண்களிடம் காதலில் மயங்கி அதன் பின்னர் கஷ்டத்தை அனுபவிப்பார்கள் என ஜோதிடம் கூறுகிறது. அந்த ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசியைச் சேர்ந்த பெண்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுபவர்கள் மற்றும் கனவு உலகில் வாழ்பவர்கள். அவர்கள் காதல் நிறைந்த சூழலை எப்போதும் விரும்புகின்றனர். இதன் காரணமாக பிளே பாய் ஆண்களின் இனிமையான பேச்சு மற்றும் கவனிப்புக்கு எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். இவர்கள் ஏமாற்றும் விதமாக பேசும் ஆண்களின் வார்த்தைகளில் உள்ள காதல் உணர்வுக்கு மயங்கி அவர்களின் உண்மையான இயல்பை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர்.
மேலும் இவர்கள் அன்பான செயல்பாடுகள் மற்றும் அதீத பாராட்டுகளுக்கு மயங்கி விடுவார்கள். இதன் காரணமாக நேர்மையற்ற ஆண்களின் வலையில் எளிதாக சிக்கிக் கொள்கின்றனர்.
துலாம்
துலாம் ராசியைச் சேர்ந்த பெண்கள் அழகு மற்றும் நாகரீகமான ஆளுமைகளை விரும்புபவர்கள். ஆண்கள் இவர்களிடம் மென்மையான அணுகு முறையை கொண்டு இருந்தாலோ அல்லது இவர்களை அதீதமாக பாராட்டினாலோ இவர்கள் அதில் மயங்கி விடுகின்றனர். இவர்கள் அன்பில் உண்மையான ஆழத்தை விட மேலோட்டமான அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக விளங்கலாம்.
மேலும் பிளே பாய் ஆண்கள் செய்யும் குறும்புத்தனம் மற்றும் உற்சாகத்தால் இவர்கள் பெரிதும் ஈர்க்கப்படுகிறார்கள். இவை அனைத்துமே தற்காலிகமானது என்று தெரிந்த பின்னர் அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
மிதுனம்
மிதுன ராசிப் பெண்கள் பேச்சுத் திறமை மற்றும் புத்திசாலித்தனமான உரையாடல்களை விரும்புவார்கள். பிளே பாய் ஆண்களின் வார்த்தை விளையாட்டு மற்றும் சுவாரஸ்யமான ஆளுமை இவர்களை எளிதில் கவர்ந்து விடுகிறது. இவர்கள் உறவுகளின் நீண்ட கால உறுதித்தன்மையை விட தற்காலிக உற்சாகத்திற்கு மயங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மேலும் இவர்களிடம் இருக்கும் சுதந்திரமான இயல்பு காரணமாக இதுபோன்ற நேர்மையற்ற ஆண்களிடம் எளிதாக வீழ்ந்து விடுகின்றனர். ஆனால் அவர்களின் உண்மையான முகம் தெரிய வரும் பொழுது மிகவும் மனவேதனைக்கு ஆளாகின்றனர்.
விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் மர்மமான மற்றும் தீவிரமான ஆளுமைகளை விரும்புபவர்கள். பிளே பாய்களிடம் இருக்கும் மர்மமான தோற்றமும், உணர்ச்சிகரமான அணுகுமுறையும் இவர்களை எளிதில் ஈர்க்கிறது. இவர்கள் பிளே பாய்களின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் அவர்களின் வசீகரத்தில் சிக்கிக் கொள்ளலாம்.
மேலும் அவர்கள் உணர்ச்சியை ரீதியான தொடர்புகளை பெரிதும் மதிக்கும், பாதுகாப்பு உணர்வை வழங்கக்கூடிய ஆண்களிடம் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் இந்த பாதுகாப்பு என்பது தற்காலிகமானது என்பதை தெரிந்து கொண்ட பின்னர் அவர்கள் கடும் வேதனையை அனுபவிக்கின்றனர்.
தனுசு
தனுசு ராசியைச் சேர்ந்த பெண்கள் சுதந்திரமானவர்கள் மற்றும் சாகச உணர்வு கொண்டவர்கள். இவர்கள் பிளே பாய்களின் வாழ்க்கையை ரசிக்கும் மனப்பான்மை உடையவர்கள். பிளே பாய்களின் உற்சாகமான இயல்பு மற்றும் அணுகுமுறை இவர்களை எளிதில் கவர்கிறது. இவர்கள் நீண்ட கால உறவுகளை விட தற்போதைய மகிழ்ச்சியையே முக்கியத்துவமாக கருதுகின்றனர்.
இதனால் தனுசு ராசி பெண்கள் பிளே பாய்களின் வலையில் எளிதில் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் நேர்மையற்ற ஆண்கள் உதிர்க்கும் பொய்யான பாசத்தையும், வாக்குறுதிகளையும் இவர்கள் எளிதில் நம்பி விடுகின்றனர். ஆனால் உண்மை தெரிய வரும் பொழுது பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)