Asianet News TamilAsianet News Tamil

வீட்டிற்குள் சிட்டுக்க்குருவி, புறா வந்தால் நல்ல சகுனமா? எந்த உயிரினங்கள் வந்தால் கெட்ட சகுனம்?

எந்த உயிரினங்கள் நம் வீட்டிற்கு வந்தால் அதிர்ஷ்டம் ஏற்படும், எந்தெந்த உயிரினங்கள் வந்தால் துரதிர்ஷ்டம் ஏற்படும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Is it a good omen if a sparrow or a pigeon enters the house? Which creatures are bad omens? Rya
Author
First Published Oct 14, 2023, 2:19 PM IST

இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்டது என்றாலும் ஒவ்வொரு உயிரினத்திற்கு ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். நம் வசிக்கும் வீட்டில் குருவி, பறவைகள் என பல உயிரினங்கள் அவ்வப்போது வரக்கூடும். எனவே எந்த உயிரினங்கள் நம் வீட்டிற்கு வந்தால் அதிர்ஷ்டம் ஏற்படும், எந்தெந்த உயிரினங்கள் வந்தால் துரதிர்ஷ்டம் ஏற்படும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சிட்டுக்குருவி :

வீட்டுக்குள் சிட்டுக்குருவி வந்தால் அதனை விரட்ட வேண்டாம். ஏனெனில் எப்போதுமே வீட்டிற்குள் சிட்டுக்குருவி வராது. அரிதாக சிட்டுக்குருவி வீட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. அப்படி சிட்டுக்குருவி உங்கள் வீட்டிற்குள் வந்தால் அதை விரட்ட வேண்டம். அது அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நல்ல சகுனமாக கருதப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆந்தை :

ஆந்தையின் தோற்றம் காரணமாக பலரும் அதை வெறுப்பதுண்டு. ஆனால் ஆந்தை என்பது மகாலட்சுமியின் வாகனமாகும். வட மாநிலங்களில் அதிர்ஷ்ட லட்சுமி ஆந்தையை தான் தனது வாகனமாக கொண்டுள்ளார். எனவே ஆந்தை உங்கள் வீட்டிற்குள் நுழைவது அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. அதை அபசகுனமாக கருத வேண்டாம்.

பல்லி :

பொதுவாக பெரும்பாலனவர்களின் வீடுகளில் பல்லி இருக்கும். ஆனால் அதனை பலரும் துரத்திவிட நினைப்பார்கள். பல்லி அதிர்ஷ்டம் தரும் உயிரினமாகும். வீட்டில் ஒரு பல்லி  கூட இல்லை எனில் அங்கு பணம் கரைந்து கொண்டே இருக்கும். வீண் செலவுகளும் விரயங்களும் அதிகரிக்கும். ஆனால் அதே உங்கள் வீட்டின் பீரோவுக்கு பின்னால் பல்லி இருந்தால் கூடுதல் அதிர்ஷ்டம் கிடைக்கும். அப்படி இருந்தால் விரைவில் செல்வ வளம் பெருகப் போகிறது என்று அர்த்தம்.

 

ராணி போல் வாழ்வதற்காகவே பிறந்த பெண்கள் இவர்கள் தான்... நீங்க எந்த ராசின்னு செக் பண்ணுங்க..

புறா :

புறா வீட்டிற்கு வருவது நல்ல சகுனத்தையே குறிக்கும். புறா வீட்டிற்கு வருவதால் செல்வ வளம் மேலும் அதிகரிக்கும் என்பது ஐதீகம். எனவே புறாக்களுக்க்கு தானியம் போடுவது தண்ணீர் வைப்பது, போன்றவற்றால் நமக்கு புண்ணியம் கிடைக்கும். இதே போல் பொன்வண்டு, குளவி, கிளி போன்றவை வீட்டிற்குள் வந்தால் அது நல்ல சகுனமாகவே கருதப்படுகிறது.

எந்த உயிரினங்கள் வந்தால் துரதிர்ஷ்டம்?

வீடுகளில் பாம்பு, பூரான், தேள், ஆமை, விஷ பூச்சிகள் வருவது அல்லது காக்கை வருவது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இவை வீட்டிற்கு வந்தால் கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. வீட்டில் பிரச்சனைகள், துன்பங்கள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios