செவ்வாய் கிழமை பிறந்தவர்கள் ஆள் எப்படி? - அவர்களிடம் ஒளிந்திருக்கும் அந்த மூன்று முக்கிய குணங்கள்!
பொதுவாக பிறக்கும் ஒருவரின் கிரக நிலைகளை ஒப்பிட்டு தான் அவருடைய குணம் மற்றும் எதிர்காலம் குறித்து பல தகவல்களை ஜோதிடர்கள் கூறி வருகின்றனர்.
இது ஜோதிடத்தின் அடிப்படை என்றே கூறலாம், அந்த வகையில் ஒரு மனிதன் பிறந்த கிழமையை வைத்தும், அந்த கிழமைக்காண கிரகத்தை வைத்தும் தான் அந்த மனிதனின் குணாதிசயங்கள் முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் ஆள் எப்படி?, அவர்களிடம் இருக்கக்கூடிய மூன்று சிறந்த குணங்கள் என்னென்ன? என்பதை குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தை கொண்டவர்கள், இயல்பாகவே இவர்களுக்கு தன்னம்பிக்கை என்பது மிக மிக அதிகமாக இருக்கும். ஒருவர் தன்னைப் பற்றி குறைத்து மதிப்பிட்டு, அவரை இழிவு படுத்தினாலும், அவர்கள் சொன்னது பொய் என்று நிரூபிக்கும் அளவிற்கு உழைக்கக்கூடிய தன்னம்பிக்கை அவர்களிடம் அதிகம் இருக்கும்.
Raj Yogam : இந்த ராசிக்காரர்கள் ராஜயோகத்துடன் பிறந்தவர்கள்..!! இதில் உங்கள் ராசி இருக்கா?
உந்துதல், இன்று பலருக்கு மிகவும் தேவையான ஒரு குணம் தான் இந்த உந்திச்செல்லும் ஒரு குணம். வாழ்க்கையில் நமக்கு ஏதோ ஒரு வகையில் பேரிடி விழும் பொழுது, அந்த இடத்தில் நாம் மிகவும் சோர்ந்து போவது இயல்புதான். ஆனால் சோர்ந்துபோய் ஓரிடத்தில் முடங்கி விடாமல் நம்மை நாமே உந்திக்கொண்டு, மேல் எழுந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களிடம் இந்த உந்துதல் திறன் அதிகம் காணப்படுகிறது.
சுதந்திரம், தன் எண்ணத்திலும், பேச்சிலும், செயலிலும் சுதந்திரமாக பயணிக்கும் ஒரு மனிதன் எல்லையற்றவனாகிறான். சுதந்திரம் என்பது பிறரை மதிக்காமல் செயல்படுவது அல்ல, தான் நினைத்தவாறு, அதேசமயம் பிறருக்கு உபத்திரம் இல்லாமல் வாழும் ஒரு முறையை தான் சுதந்திரமான வாழ்க்கை முறை என்கிறோம். செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் பெரிய அளவில் பிறரை நாடாமல் இருப்பது, கிடைப்பது சிறிதளவாக இருந்தாலும் அதைக் கொண்டு தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் திறன் கொண்டவர்கள்.
உங்கள் வீட்டில் பணம் பெறுக வேண்டுமா? - அதனை உங்கள் இல்லத்திற்குள் ஈர்க்க சிறந்த வழி என்ன?