Thulam Rasi This Week Rasi Palan: டிசம்பர் 29 முதல் ஜனவரி 04 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த வார ராசிப்பலன்கள் - துலாம்
துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு புதிய நம்பிக்கையும், உற்சாகத்தையும் தரும் வாரமாக இருக்கும். இழுபறியில் இருந்த விஷயங்கள் இந்த வாரம் முடிவுக்கு வரும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் உயரும்.
நிதி நிலைமை:
இந்த வாரம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் இருந்து வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக பழைய கடன்களை அடைப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பங்குச் சந்தை அல்லது நீண்ட கால முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பழைய நோய்களின் தாக்கம் குறையும். அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உணவு கட்டுப்பாடு அவசியம். மன அழுத்தத்தை குறைப்பதற்கு யோகா மற்றும் தியானம் செய்யலாம். கண் அல்லது நரம்பு சம்பந்தமான சிறு உபாதைகள் தோன்றி மறையும்.
கல்வி:
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கடினமான பாடங்களையும் எளிதில் புரிந்து கொண்டு படிப்பீர்கள். ஆசிரியர்களிடமிருந்து பாராட்டுக்களும், வழிகாட்டுதலும் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். மேற்படிப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு விருப்பமான கல்லூரியில் இடம் கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
பணியிடத்தில் உங்கள் உழைப்புக்கான ஊதியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த இடமாற்றம் அல்லது ஊதிய உயர்வுக்கான செய்திகள் கிடைக்கலாம். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு காலம் கனிந்து உள்ளது. ஊடகம் மற்றும் ஐடி துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு சென்று பணிபுரிய நினைப்பவர்களுக்கு விசா தொடர்பான சிக்கல்கள் நீங்கும்.
குடும்ப உறவுகள்:
கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். சிறு சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து புரிதல் கூடும். குழந்தைகளின் கல்வி மற்றும் சுப காரியங்கள் தொடர்பாக மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள். உறவினர்களிடம் நிலவி வந்த கசப்புணர்வு நீங்கும். காதல் உறவுகள் திருமணத்தை நோக்கி நகரும். பெற்றோரின் சம்மதம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தந்தை வழி உறவுகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையலாம். தந்தை வழி சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபடவும். ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வெண்ணெய் காப்பிட்டு வழிபடலாம். இயலாதவர்களுக்கு உடைகள் அல்லது இனிப்புகளை தானமாக வழங்குவது நல்லது. “ஓம் மகாலட்சுமியை நமஹ” மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பது நேர்மறை பலன்களைக் கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)


