Mithuna Rasi This Week Rasi Palan: டிசம்பர் 29 முதல் ஜனவரி 04 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த வார ராசிப்பலன்கள் - மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, புத்தாண்டின் தொடக்கம் உங்களுக்கு புதிய உற்சாகத்தையும், தன்னம்பிக்கையின் தர இருக்கிறது. குரு பகவானின் நிலை காரணமாக அப்போது குழப்பங்கள் வந்தாலும், உங்கள் அறிவார்ந்த செயல்பாடுகளால் அனைத்தையும் வெல்வீர்கள். கடந்த சில வாரங்களாக இருந்த மந்த நிலை மாறி, விஷயங்கள் வேகமெடுக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.
நிதி நிலைமை:
வாரத்தின் தொடக்கத்தில் பண வரவு சீராக இருக்கும். ஆனால் செலவுகளும் அதிகமாக இருக்கலாம். குடும்ப விசேஷங்கள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சில சிறிய தொகை செலவாகக்கூடும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். முதலீடுகளைப் பொறுத்தவரை அவசரப்பட்டு முதலீடு செய்வதை தவிர்க்கவும். பிறருக்கு கடன் கொடுப்பதையோ அல்லது வாங்குவதையோ தவிர்த்து விடுங்கள்.
ஆரோக்கியம்:
இந்த வாரம் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படலாம். குறிப்பாக செரிமானம் மற்றும் வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். அதிகப்படியான வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் அல்லது தூக்கமின்மை ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது அவசியம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வயதானவர்களுக்கு மூட்டு வலி அல்லது நரம்பு தொடர்பான சிறு தொந்தரவுகள் வந்து நீங்கும்.
கல்வி:
மாணவர்களுக்கு இந்த வாரம் சவாலானதாக இருக்கலாம். கவனச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராக வருபவர்கள் கூடுதல் நேரத்தை படிப்பிற்காக ஒதுக்க வேண்டும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
அலுவலகத்தில் வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். சனி பகவானின் நிலை காரணமாக கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் சற்று தாமதமாக கிடைக்கலாம். மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய கிளைகள் தொடங்குவது அல்லது தொழிலை விரிவாக்கம் செய்வது தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும்.
குடும்ப உறவுகள்:
இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். குழந்தைகள் வழியாக நல்ல செய்திகள் கிடைக்கலாம். சகோதர, சகோதரிகளுடன் நிலவி வந்த சொத்து தகராறுகள் சுமூகமாக முடியும். திருமண முயற்சிகளில் இருந்து தடைகள் விலகி சுப செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை மற்றும் விருந்து உபச்சாரங்களால் வீடு களை கட்டும்.
பரிகாரம்:
பெருமாள் சன்னதியில் கற்கண்டு நைவேத்யம் படைத்து அதை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குங்கள். சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும். “ஓம் நமோ நாராயணா:” மந்திரத்தை தினமும் 108 முறை பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உணவை தானமாக வழங்குவது புண்ணியம் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)


