பெண்களிடம் அத்துமீறிய போலீஸ்... ஒகேனக்கலில் நடந்த அதிர்ச்சி வீடியோ!

Sep 25, 2018, 4:31 PM IST

சென்னையைச் சேர்ந்தவர்கள் கடந்த 25 ஆம் அன்று ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா வந்தபோது, பரிசலில் பயணம் செய்ய சீட்டு வாங்கும்போது ஏற்பட்ட சிறு தகராறு, பரிசல் காண்ட்ராக்டர் கொடுத்த தவறான தகவல் காரணமாக பெரிய பிரச்சனையாகி உள்ளது. சுற்றுலா பயணிகளை, காவல் ஆய்வாளரும், காவலர்களும், போலீசார் அல்லாதவர்களும் அடித்து, இழுத்து சென்றுள்ளனர்.

காவலர் அல்லாத சிலர் பெண்களிடம் தவறாக நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் வீடியோ எடுத்தவர்களை போலீசார் மிரட்டியும் அடித்தும் துன்புறுத்தியுள்ளனர்.  அதுமட்டுமல்லாமல், காவல் நிலையத்தில் அரை நிர்வாணமாக அமர வைத்தும், கீழ்த்தரமான வார்த்தைகளால் பெண்களை இழிவுபடுத்தியும் உள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.