நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் அதிரடி – 201 ரன்கள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

First Published May 2, 2024, 9:55 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 50ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து ரன்கள் எடுத்துள்ளது.

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th Match

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 50ஆவது ஐபிஎல் 2024 லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்திலுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th Match

அதன்படி டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், அபிஷேக் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்களில் நடையை கட்டினார். முதல் 6 ஓவர்களில் ஹைதராபாத் 2 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் எடுத்திருந்தது. 8 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்திருந்தது.

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th Match

அதன் பிறகு டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ் ரெட்டி இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், ஹெட் 44 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th Match

இதே போன்று அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்த நிதிஷ் ரெட்டி 42 பந்துகளில் 3 பவுண்டரி, 8 சிக்சர் உள்பட 76 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில் வந்த ஹென்ரிச் கிளாசென் 19 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, 50th Match

இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சந்தீப் சர்மா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

click me!