உழவாரப் பணி செய்யும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தில் உரிமை இல்லை: நீதிமன்றம்

By SG Balan  |  First Published May 2, 2024, 10:00 PM IST

கோயில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள மக்கள் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட இணை ஆணையர்களிடம் கோரிக்கை வைக்கலாம். இணை ஆணையர் 7 நாட்களுக்குள் கோரிக்கையைப் பரிசீலித்து ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும்.


திருக்கோயில்களில் உழவாரப் பணிகள் உள்ளிட்ட பராமரிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் P.D. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tap to resize

Latest Videos

திருக்கோயில்களின் உழவாரப் பணிகள் மேற்கொள்வது, இந்து சமய அறநிலையத்துறை இடங்களில் மக்களின் பங்கு ஆகியவை குறித்து உயர் நீதிமன்றம் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க நிதி வழங்குக: ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்!

அதன்படி, கோயில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள மக்கள் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட இணை ஆணையர்களிடம் கோரிக்கை வைக்கலாம். இணை ஆணையர் 7 நாட்களுக்குள் கோரிக்கையைப் பரிசீலித்து ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும்.

திருக்கோவில் வளாகம், குளம் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யும் பணிகள், தோட்ட பராமரிப்பு, கதவுகளில் வண்ணம் பூசுதல் ஆகிய வேலைகளைச் செய்ய அனுமதி உண்டு. ஆனால், கோவில் சீரமமைப்பு பணிகளை செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. உழவாரப் பணியில் ஈடுபடும் பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தில் எந்த உரிமையும் இல்லை.

இந்து சமய அறநிலையத்துறை கோயில்களின் பராமரிப்பு பணிகள் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நிபுணர்களின் பிரிந்துரைகளைப் பெற்று சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.

வெறும் 500 க்கு கிடைக்கும் மினி ஏசி! கோடையில் சூட்டைத் தணிக்கும் கூலான ஐடியா!

click me!