Oct 14, 2018, 2:05 PM IST
ட்விட்டரில் ஒரே ஒரு மறுப்பு பதிவிட்டுவிட்டு தன்மீதான செக்ஸ் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காமல் சைலன்ட்டாக இருந்த வைரமுத்து முதல்முறையாக வாய்திறந்து பேசியிருக்கிறார். இதுகுறித்து மறுப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில்; என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது, அசைக்கமுடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன். மேலும், கடந்த ஒரு வாரகாலமாக தலைசிறந்த வழக்கறிஞர்களோடு ஆலோசித்து வருகிறேன். என் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருக்கிறேன் என தில்லாக வீடியோ வெளியிட்டுள்ளார்.