3 ஆண்டுகளுக்கு (1115 நாட்கள்) பிறகு முதல் முறையாக பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

First Published May 5, 2024, 8:48 PM IST

தரம்சாலாவில் நடைபெற்ற 53ஆவது லீக் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 3 ஆண்டுகள் அதாவது 1115 நாட்களுக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளது.

IPL 2024 PBKS vs CSK

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 53ஆவது லீக் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சாஹர், மதீஷா பதிரனா, முஷ்தாபிஜூ ரஹ்மான் என்று யாரும் இல்லை.

PBKS vs CSK, IPL 2024

மேலும், மிட்செல் சாண்ட்னர் மற்றும் சிமர்ஜீத் சிங் இருவரும் இந்தப் போட்டியி முதல் முறையாக களமிறங்கினர். முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியானது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது. இதில், அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 43 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்கள் எடுத்தார்.

IPL 2024 PBKS vs CSK

பவுலிங்கைப் பொறுத்த வரையில், ராகுல் சாஹர் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், சாம் கரண் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

PBKS vs CSK, IPL 2024

பின்னர், எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் பிராப்சிம்ரன் சிங் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், துஷார் தேஷ்பாண்டே வீசிய போட்டியின் 2ஆவது ஓவரில் பேர்ஸ்டோவ் 7 ரன்கள் மற்றும் ரிலீ ரோஸோவ் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

IPL 2024 PBKS vs CSK

ஷஷாங்க் சிங் மற்றும் பிராபிசிம்ரன் சிங் இருவரும் ஓரளவு தாக்குபிடித்தனர். ஷஷாங்க் சிங் 27 ரன்னில் ஆட்டமிழக்க, பிராப்சிம்ரன் சிங் 30 ரன்னில் வெளியேறினார். ஜித்தேஷ் சர்மா கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். சாம் கரண் 7 ரன்னிலும், அஷுதோஷ் சர்மா 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

PBKS vs CSK, IPL 2024

கடைசியில் ஹர்ப்ரீத் பிரார் 17, ஹர்ஷல் படேல் 12, ராகுல் சாஹர் 16 ரன்களில் வெளியேறினர். கஜிஸோ ரபாடா 11 ரன்கள் எடுத்தார். இறுதியாக 20 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

IPL 2024 PBKS vs CSK

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 11 போட்டிகளில் 7ஆவது தோல்வியை தழுவியது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட் கைப்பற்றினார். துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

PBKS vs CSK, IPL 2024

மிட்செல் சாண்ட்னர் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். மேலும், இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறவே புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திலிருந்து 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

IPL 2024 PBKS vs CSK

மேலும், சென்னையில் நடைபெற்ற 49ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக பஞ்சாப் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 53ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

PBKS vs CSK, IPL 2024

அதோடு, 3 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1115 நாட்களுக்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளது. கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 8ஆவது லீக் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சிஎஸ்கே வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!