நேற்று செம்ம குத்து! இன்று ஸ்வீட்டு! வீட்டிற்க்கே சென்று ட்விஸ்ட் கொடுத்த தமிழிசை...

Sep 18, 2018, 4:59 PM IST

சென்னையில் பாஜக தலைவர்  தமிழிசை பேட்டி அளிக்கும்போது பின்னால் நின்ற ஆட்டோ டிரைவர் ஒருவர் பவ்யமாக “அக்கா ஒரு நிமிடம் பெட்ரோல் விலை டெய்லி ஏறுதுக்கா” என தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார். அப்போது இதைக்கேட்ட தமிழிசை, அவரது பக்கம்கூட திரும்பாமல் சிரித்தபடி இருந்தார். ஆனால் அவரைப் பாஜக நிர்வாகிகள் கழுத்தில் கையைப்போட்டு இழுத்தனர். பின்னர் அவரை வெளியே இழுத்துச் சென்றவர்கள் அவரைத் சரமாரியாக தாக்கினார்.

தற்போது இந்தக் காட்சிகள்  ட்விட்டர், வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெட்ரோல் விலை குறித்து கேள்வி கேட்ட ஒரே காரணத்துக்காக ஆட்டோ ஓட்டுநரை அடித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆட்டோ டிரைவரின் வீட்டுக்கு சென்ற பாஜக தலைவர் தமிழிசை  தனது பக்கத்தில் கதிரை உட்காருமாறு கூறினார். குடும்பத்தினருக்கு இனிப்பு வழங்கினார். மேலும் கதிர் கேட்ட கேள்வியில் தவறில்லை என்றும் கூறியிருந்தார். மேலும் இந்த சந்திப்பு வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் தமிழிசை வெளியிட்டுள்ளார்.