Velmurugan s | Published: Mar 19, 2025, 4:00 PM IST
சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் தற்போதைய பயணத்தின் ஒரு பகுதியாக விண்வெளியில் 288 நாட்கள் செலவிட்ட நிலையில் பூமிக்கு திரும்பபினர். இந்த நிலையில் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளியில் இருந்ததால் அவர்கள் பூமியில் உடல் ரீதியாக பெரியளவிலான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.நீண்ட கால விண்வெளி பயணங்கள் மனித உடலை எப்படி பாதிக்கும்? சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் ஒன்பது மாத பயணத்தை முடித்து திரும்பும்போது, இந்த கேள்வி மீண்டும் பெரிய விவாதமாக மாறியுள்ளது.இவ்வளவு காலம் விண்வெளியில் இருக்கும்போது பல பிரச்சனைகள் உள்ளன. பூமியின் ஈர்ப்பு விசையை அனுபவித்து வாழும் வகையில் மனித உடல் பரிணமித்துள்ளது. ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் வாழும்போது உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அதில் முக்கியமானது தசைகள் பலவீனமடைவது. ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் நேராக நிற்கவும், நடக்கவும் அதிக தசை பலம் தேவையில்லை. எனவே மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை விண்வெளியில் செலவிட்டால் உடலில் உள்ள தசை நிறை 30 சதவீதம் வரை குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.