
Top 5 Strongest Team In IPL 2025 in Tamil : ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசன் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. நாளை தொடங்கும் ஐபிஎல் 2025 தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக ஷ்ரேயா கோஷல், திஷா பதானி மற்றும் கரண் அவுஜ்லாவின் இசை, கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட இருக்கிறது. அதன் பிறகு ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் 2025 தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. இதில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த சீசனைப் பொறுத்த வரையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு காரணம் சில அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதோடு வீரர்களும் வெவ்வேறு அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். அப்படி வாங்கப்பட்ட வீரர்கள் எப்படி புதிய அணிகளில் தங்களது திறமையை வெளிப்படுத்துவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதற்கு முன்னதாக ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசனில் வலிமையான அணி எது என்பது பற்றி பார்க்கலாம்.
ஐபிஎல் 2025 தொடரில் ஒவ்வொரு அணியும் வலிமையான அணியாக இருந்தாலும் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் அதிகளவில் டஃப் கொடுக்க கூடிய டாப் 5 வலிமையான அணிகளைப் பற்றி பார்ப்போம். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ஐபிஎல் தொடரில் 5 முறை டிராபி வென்ற வெற்றிகரமான அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்று. சிஎஸ்கே அணியின் செயல்திறன், வலுவான ரசிகர் பட்டாளம், வீரர்களின் திறமை ஆகியவை சிஎஸ்கே அணியை வலிமையான அணியாக மாற்றுகிறது. சிஎஸ்கே அணியைப் பொறுத்த வரையில் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே ஆகியோர் பேட்டிங்கிலும், மதீஷா பதிரனா, ஜேமி ஓவர்டன், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், சாம் கரண் ஆகியோர் பந்து வீச்சிலும் கலக்குவார்கள்.
மும்பை இந்தியன்ஸ்:
ஐபிஎல் 2025 தொடரின் வலிமையான அணி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 2ஆவது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்த வரையில் முதல் முறையாக 5 முறை டிராபி வென்ற அணியாக சாதனை படைத்தது. மேலும், அதிகளவில் இந்திய வீரர்கள் இடம் பெற்ற அணியாகவும் மும்பை இந்தியன்ஸ் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்த வரையில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, டிரெண்ட் போல்ட், ரியான் ரிக்கல்டன், நமன் திர் ஆகியோர் கொண்ட நட்சத்திர வரிசையை பெற்றுள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் அவர்களது ஆழம் அவர்களை வலிமையான அணியாக ஆக்குகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
அதிக முறை ஐபிஎல் டிராபி வென்ற அணிகளின் பட்டியலில் அடுத்ததாக இருப்பது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தான். இதுவரையில் கேகேஆர் 3 முறை டிராபி வென்றுள்ளது. கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கேகேஆர் 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நடப்பு சாம்பியனான, KKR ஒரு சமநிலையான அணியையும் திறமையை விரும்பும் ஆர்வத்தையும் கொண்டுள்ளது. அழுத்தத்தின் கீழ் செயல்படும் வீரர்களின் திறன் மற்றும் அவர்களின் சமீபத்திய ஏல உத்திகள் அவர்களை 2025 சீசனுக்கு ஒரு வலிமையான போட்டியாளராக ஆக்குகின்றன.
கேகேஆர் அணியைப் பொறுத்த வரையில் அஜிங்க்யா ரஹானே, ரிங்கு சிங், குயீண்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி ஆகியோரை கொண்ட நட்சத்திரங்களைப் பெற்றுள்ளது. கேகேஆர் அணியைப் பொறுத்த வரையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
அதிரடிக்கு பெயர் போன சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்த வரையில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. அதிக முறை டிராபி வென்ற அணிகளின் பட்டியலில் ஹைதராபாத் ஒரு முறை டிராபி வென்ற பட்டியலிலும் இடம் பெற்றிருக்கிறது.
டாப், மிடில் மற்றும் பாட்டம் ஆர்டர் என்று ஒவ்வொரு துறையிலும் நட்சத்திர வீரர்களுடன், SRH ஐபிஎல் 2025 ஐ ஆதிக்கம் செலுத்தத் தயாராக உள்ளது. அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரைக் கொண்ட அவர்களின் அதிரடி பேட்டிங் வரிசை, பேட் கம்மின்ஸ், முகமது ஷமி, ராகுல் சாஹர், ஜெயதேவ் உனத்கட் மற்றும் ஆடம் ஜாம்பா தலைமையிலான சக்திவாய்ந்த பந்துவீச்சு தாக்குதலால் வலிமையான அணியாக மாறியிருக்கிறது.
குஜராத் டைட்டன்ஸ்:
குஜராத் டைட்டன்ஸ் தனது அறிமுக சீசனில் முதல் முறையாக டிராபியை கைப்பற்றியது. அடுத்த சீசனில் இறுதிப் போட்டி வரை சென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சு மற்றும் சைலண்டான கேப்டன்ஷி ஆகியவற்றின் கலவையைக் குஜராத் டைட்டன்ஸ் கொண்டுள்ளது. ஷுப்மான் கில், ஜோஸ் பட்லர் மற்றும் சாய் சுதர்சன், ஷாருக் கான், ராகுல் திவேதியா, ரஷீத் கான் ஆகியோரைக் கொண்ட அவர்களின் பேட்டிங் வரிசை குறிப்பாக வலிமையானது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இஷாந்த் சர்மா, ஜெரால்டு கோட்ஸி, ரஷீத் கான், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, கஜிசோ ரபாடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஐபிஎல் 2025 தொடரில் டாப் 5 வலிமையான அணிகளின் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகள் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் வலிமையான அணியாக திகழ்கின்றன.