சுஷாந்த் முதல் மதுபாலா வரை; இளம் வயதிலேயே மரணமடைந்த பாலிவுட் பிரபலங்கள் ஒரு பார்வை

சுஷாந்த் சிங் முதல் மதுபாலா வரை இளம் வயதில் இறந்து போன பாலிவுட் பிரபலங்களைப் பற்றியும் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது பற்றியும் பார்க்கலாம்.

sushant singh rajput To madhubala here the list of Bollywood actors who died young gan

Bollywood celebrities died at young age : இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் திரையுலகமாக பாலிவுட் உள்ளது. அங்கு நெபோடிசம் அதிகமாக இருந்தாலும் அவ்வப்போது திறமைவாய்ந்த நடிகர்கள் ஜொலித்த வண்ணம் உள்ளனர். அப்படி பாலிவுட்டில் ஜொலித்த நடிகர், நடிகைகள் சிலர் இளம் வயதிலேயே மரணமடைந்த சம்பவங்களும் அங்கு அதிகளவில் அரங்கேறின. அந்த வகையில் சுஷாந்த் சிங் முதல் மதுபாலா வரை இளம் வயதில் இறந்து போன பாலிவுட் பிரபலங்களை பற்றி பார்க்கலாம்.

sushant singh rajput To madhubala here the list of Bollywood actors who died young gan
1. சுஷாந்த் சிங் ராஜ்புத்

சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இவர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ்.தோனி தி அண்டோல்டு ஸ்டோரி படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 34.


2. துனிஷா சர்மா

துனிஷா சர்மா 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி ஒரு தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பின்போது தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது சக நடிகரின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.இறக்கும் போது இவருக்கு வயது 20. 

3. ஜியா கான்

ஜியா கான் 2013 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் இன்னும் தீர்க்கப்படாத புதிராகவே உள்ளது. இறக்கும் போது இவருக்கு வயது 25.

4. ஆதித்யா சிங் ராஜ்புத்

ஆதித்யா சிங் ராஜ்புத் 2023 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் போதைப்பொருள் அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக கூறப்படுகிறது. இறக்கும் போது இவருக்கு வயது 33.

5. திவ்யா பாரதி

திவ்யா பாரதி 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து இறந்தார். அவரது மரணம் இன்றுவரை ஒரு மர்மமாகவே உள்ளது. இறக்கும் போது இவருக்கு வயது 19.

6. மதுபாலா

"இந்திய சினிமாவின் வீனஸ்" என்றும் அழைக்கப்படும் மதுபாலாவுக்கு பிறக்கும் போதே இதயக் குறைபாடு இருந்தது, அது நீண்டகால உடல்நலப் பிரச்சனையாக வளர்ந்து கடந்த 1969-ம் ஆண்டு பிப்ரவரி 23ந் தேதி அன்று தனது 36 வயதில் இதயம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக காலமானார் மதுபாலா.

இதையும் படியுங்கள்... அனுஷ்கா சர்மா முதல் அக்ஷய் குமார் வரை: IPL தொடக்க விழாவில் கலக்கிய பாலிவுட் பிரபலங்கள்!

Latest Videos

vuukle one pixel image
click me!