‘ஐயர் பொண்ணு மீன் வாங்க வந்தா’ நா முத்துக்குமார் பாடல் வரியில் ஒளிந்துள்ள ரியல் லவ் ஸ்டோரி!
லிங்குசாமி இயக்கிய ரன் படத்திற்காக பாடலாசிரியர் நா முத்துக்குமார் எழுதிய தேரடி வீதியில் பாடல் வரியில் ஒளிந்துள்ள லவ் ஸ்டோரி பற்றி பார்க்கலாம்.
லிங்குசாமி இயக்கிய ரன் படத்திற்காக பாடலாசிரியர் நா முத்துக்குமார் எழுதிய தேரடி வீதியில் பாடல் வரியில் ஒளிந்துள்ள லவ் ஸ்டோரி பற்றி பார்க்கலாம்.
Run Movie Theradi Veethiyil Song Secret : கவிஞர் நா.முத்துக்குமார், தமிழ் சினிமாவில் பல மாஸ்டர் பீஸ் பாடல்களை கொடுத்துள்ளார். இவர் மறைந்தாலும் இவர் எழுதிய பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் அவர் எழுதும் உணர்வுப்பூர்வமான பாடல் வரிகள் தான். நா.முத்துக்குமாரின் பாடல்களின் ஸ்பெஷல் என்னவென்றால் அவர் பெரும்பாலும் வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து சில பாடல் வரிகளை எழுதியிருப்பார். அப்படி ஒரு பாடலைப் பற்றி தான் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்க உள்ளோம்.
அப்படி தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து நா.முத்துக்குமார் எழுதிய பாடல் தான் ரன் படத்தில் இடம்பெறும் ‘தேரடி வீதியில் தேவதை வந்தா’ பாடல். இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. வித்யாசாகர் இசையில் உருவான இப்பாடலில் இடம்பெறும் ஒரே வரியில் ஒரு குட்டி காதல் கதையையே சொல்லி இருக்கிறார் நா முத்துக்குமார். அந்த பாடலில் இடம்பெற்ற வரிகளில் மிகவும் பேமஸ் ஆன வரி என்றால் ‘ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தால் லவ் மேரேஜ்-ன்னு தெரிஞ்சுக்கோ’ என்கிற பாடல் வரி தான்.
இதையும் படியுங்கள்... மனைவிக்கு ஐஸ் வைக்க ஹரி எழுதிய பாடல் வரிகள்; நம்பி ஏமாந்து போன நா முத்துக்குமார்!
அந்த வரிக்கு பின்னணியில் தான் ஒரு காதல் கதை ஒளிந்திருக்கிறதாம். அது எனன்வென்றால், நா முத்துக்குமார் 7ம் வகுப்பு படிக்கையில் அவரது நெருங்கிய நண்பன் வீட்டுக்கு அடிக்கடி செல்வாராம். அவரது நண்பன் பிராமின் குடும்பத்தைச் சேர்ந்தவராம். ஒருமுறை அந்த நண்பரின் அக்கா நா.முத்துக்குமாரிடம் காசு கொடுத்து தம்பி மீன் வாங்கிட்டு வா என சொல்லி இருக்கிறார். அவரும் மீன் வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த மீன் வாடை வெளியே தெரியக்கூடாது என்பதற்காக வீட்டில் ஊதுபத்தியையும், சாம்பிரானியையும் பொருத்தி வைத்திருந்தாராம். பின்னர் அந்த மீனை கழுவி, மீன் குழம்பு சமைத்திருக்கிறார். சமைத்து முடித்ததும் நா முத்துக்குமாரை டேஸ்ட் பார்க்க சொன்னாராம்.
அசைவமே தொடாத ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த அந்த பெண் மீன் குழம்பு சமைக்க காரணம் அவருடைய காதலன் தானாம். அவர் ஒரு டுட்டோரியல் மாஸ்டரை காதலித்து வந்திருக்கிறார். அவருக்கு மீன் குழம்பு என்றால் ரொம்ப இஷ்டமாம். அவரை சர்ப்ரைஸ் செய்வதற்காக தோழியிடம் மீன் குழம்பு வைக்க கற்றுக் கொண்டு செம டேஸ்டான மீன் குழம்பையும் வைத்திருக்கிறார். அந்த காதலுக்கு தூதுவராக இருந்தது நம்ம நா முத்துக்குமார் தானாம். இந்த லவ் ஸ்டோரியை தான் ‘ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்-ன்னு தெரிஞ்சுக்கோ’ என ஒரே வரியில் சொல்லி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் கவிஞர் நா முத்துக்குமார்.
இதையும் படியுங்கள்... ஒரே வரிகளை 6 பாடல்களில் பயன்படுத்திய நா முத்துக்குமார்!