ஆஸ்கார் கிடைக்கும்னா 4வது குழந்தை பெத்துக்க நான் ரெடி; வீர தீர சூரன் நடிகர் சூரஜ் கலகல பேச்சு!

வீர தீர சூரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மலையாள நடிகர் சூரஜ், 4வது குழந்தை பெற்றுக்கொள்ள தான் ரெடியாக இருப்பதாக கூறி உள்ளார்.

Veera Dheera Sooran actor Suraj Says he is ready for 4th Baby gan

Suraj Speech in Veera Dheera Sooran Audio Launch : விக்ரம் நாயகனாக நடித்துள்ள படம் வீர தீர சூரன். இப்படத்தை சித்தா பட இயக்குனர் அருண் குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரம், காளி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன், கலைவாணி கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார்.

Veera Dheera Sooran actor Suraj Says he is ready for 4th Baby gan
Veera Dheera Sooran

வீர தீர சூரன் திரைப்படம் வருகிற மார்ச் 27ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் படத்தின் புரமோஷன் பணிகள் ஒருபுறம் பிசியாக நடந்து வரும் நிலையில், நேற்று இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் மலையாள நடிகர் சூரஜ், பேசிய கலகலப்பான பேச்சு இணையத்தில் கவனம் பெற்றிருக்கிறது.

இதையும் படியுங்கள்... விக்ரமின் ஆக்ஷன் விருந்து - வைரலாகும் வீர தீர சூரன் டிரெய்லர்


Veera Dheera Sooran Audio Launch

மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள சூரஜ், தமிழில் வீர தீர சூரன் படம் மூலம் தான் அறிமுகமாகி இருக்கிறார். இதன் ஆடியோ லாஞ்சில் ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்றை சூரஜ் பகிர்ந்துகொண்டார். அதன்படி அவருக்கு முதல் குழந்தை பிறந்த போது, முதன்முறையாக கேரள மாநில அரசு விருதை வாங்கினாராம். அதன்பின்னர் இரண்டாவது குழந்தை பிறந்தபோது அவருக்கு இரண்டாவதாக சிறந்த நடிகருக்கான கேரள மாநில அரசு விருது கிடைத்திருக்கிறது.

Suraj Speech

இது நல்லா இருக்கேனு... மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை அவருக்கு பிறந்திருக்கிறது. அப்போது அவருக்கு கேரள அரசின் மாநில விருதோடு, முதன்முறையாக தேசிய விருதும் கிடைத்ததாம். இனி எனக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்றால் அதற்காக நான் நான்காவது குழந்தையும் பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக சூரஜ் கூறியதைக் கேட்டு, நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சீயான் விக்ரம், இயக்குனர் அருண்குமார் ஆகியோர் சிரித்தனர். அவரின் இந்த பேச்சு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ஆத்தி அடி ஆத்தி; ஜிவி பிரகாஷ் குரலில் சுண்டி இழுக்கும் வீர தீர சூரன் செகண்ட் சிங்கிள்

Latest Videos

vuukle one pixel image
click me!