ஜன நாயகன் விஜய் முதல் கூலி ரஜினி வரை; அதிக சம்பளம் வாங்கும் டாப் 7 நடிகர்கள் லிஸ்ட் இதோ
சினிமா நடிகர்களின் சம்பளம் படத்துக்கு படம் ஜெட் வேகத்தில் உயர்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 7 நடிகர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
சினிமா நடிகர்களின் சம்பளம் படத்துக்கு படம் ஜெட் வேகத்தில் உயர்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 7 நடிகர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
Top 7 Highest Paid Indian Actors in 2025 : சினிமா நடிகர்களின் சம்பளம் கொரோனாவுக்கு முன்னர் வரை 100 கோடிக்கும் கம்மியாக இருந்த நிலையில், கொரோனாவுக்கு பின் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. படத்துக்கு படம் 50 கோடி... 100 கோடி என அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாலிவுட் நடிகர்களைக் காட்டிலும் தென்னிந்திய நடிகர்கள் தான் அதிகளவில் சம்பளம் வாங்குகிறார். அதன்படி 2025-ம் ஆண்டின் நிலவரப்படி அதிக சம்பளம் வாங்கும் டாப் 7 இந்திய நடிகர்களைப் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் அஜித் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளார். இவர் படத்தின் புரமோஷனுக்கு வராவிட்டாலும் இவருக்கு வாரிவழங்க தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி காத்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது உருவாகி உள்ள குட் பேட் அக்லி படத்துக்காக நடிகர் அஜித் ரூ.165 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.
பாகுபலி படம் மூலம் பான் இந்தியா நாயகனாக உருவெடுத்த பிரபாஸ். அப்படத்திற்கு பின் அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்தாலும் அதில் பெரும்பாலானவை தோல்வி படங்களாக அமைந்தன. ஒரு கட்டத்தில் ரூ.200 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகர் என்கிற பெருமையை பெற்ற பிரபாஸ். பின்னர் படங்களின் தோல்வி காரணமாக தன் சம்பளத்தை 150 கோடியாக குறைத்துக் கொண்டார்.
பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பதான், ஜவான், டுங்கி ஆகிய மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இதில் பதான் மற்றும் ஜவான் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டின. இந்த ஹாட்ரிக் வெற்றிக்கு பின்னர் தன் சம்பளத்தை உயர்த்திய ஷாருக்கான் தற்போது ஒரு படத்துக்கு ரூ.250 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
இதையும் படியுங்கள்... IPL: மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய ஷாருக்கானுக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?
அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 4-ம் இடத்தில் உள்ளார். இவர் நடிப்பில் தற்போது கூலி, ஜெயிலர் 2 என இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது. இவர் தற்போது ரூ.270 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
இந்திய திரையுலக வரலாற்றில் அதிக வசூல் அள்ளிய படத்தில் ஹீரோவாக நடித்தவர் என்கிற பெருமையை பெற்றவர் அமீர்கான். அவர் நடித்த தங்கல் படம் 2016-ம் ஆண்டு வெளியாகி 2000 கோடிக்கு மேல் வசூலித்தது. 9 ஆண்டுகள் ஆகியும் அந்த வசூல் சாதனையை இதுவரை எந்த இந்திய படமும் முறியடிக்கவில்லை. இப்படி பெருமைமிகு பல படங்களை கொடுத்துள்ள அமீர்கான் தற்போது ஒரு படத்துக்கு 250 முதல் 275 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது விஜய் தான். இந்திய அளவில் அவர் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது ஜன நாயகன் திரைப்படம் உருவாகிறது. இப்படத்திற்காக விஜய் ரூ.275 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். இத்தனை கோடி சம்பளம் வாங்கினாலும் இப்படத்தோடு நடிகர் விஜய் சினிமாவை விட்டே விலக உள்ளார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்ல உள்ளதாக விஜய் எடுத்துள்ள இந்த முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது அல்லு அர்ஜுன் தான். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1800 கோடி வசூலித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ள அல்லு அர்ஜுன், அப்படத்திற்காக ரூ.300 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார். இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கும் முதல் நடிகர் அல்லு அர்ஜுன் தான்.
இதையும் படியுங்கள்... பாலிவுட் பாட்ஷாவை புரட்டி எடுக்கப்போகும் புஷ்பா! ஷாருக் கானுக்கு வில்லனாகும் அல்லு அர்ஜுன்?