cinema
மறைந்தாலும் தன்னுடைய எதார்த்தமான பாடல் வரிகளால் என்றென்றும் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.
இவர் தனக்கு பிடித்த ஒரே உவமை கொண்ட பாடல் வரிகளை, சுமார் 6 படங்களில் இடம்பெற்ற பாடல்களில் மாற்றி மாற்றி பயன்படுத்தியுள்ளார்.
விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படத்தில் இடம்பெற்ற ஆரிரோ ஆராரிரோ பாடலில், ‘மழை நின்னு போனால் என்ன மரம் தூருதே' என எழுதி மெய்மறக்க செய்தார் நா.முத்துக்குமார்.
அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் சில்லென ஒரு மழைத்துளி பாடலில் ‘கோடைக்கால மழை வந்து போன பின்பும், சாலையோர மரம் தன்னாலே நீர் சொட்டும்’ என வர்ணித்திருந்தார்.
இதே வரிகளை கொஞ்சம் மாற்றி, நான் மகான் அல்ல படத்தில் இடம்பெறாமல் போன, பூமாலை நேரம் என்கிற பாடலில், ‘மழை நின்ற பின்னர் தூரல் தரும் மரங்கள் போல' என எழுதி இருந்தார்.
காதல் படத்தில் இடம்பெறும் 'தொட்டு தொட்டு என்னை பாடலில், ‘மழை நின்ற போதும் மரக்கிளை இங்கே மெதுவாய் தூரும்’ என்கிற வரிகளை அழகிய சொற்களை கோர்த்து எழுதி இருப்பர் நா.முத்துக்குமார்.
இதே வரிகளை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து திருடன் போலீஸ் படத்தில் வரும் தெவம் என்பதென்ன பாடலில், ‘மழை துளி நின்றும் மரம் இங்கே அட கண்ணீர் வார்க்கும்’ என எழுதினர்.
அதேபோல் ஸ்ரீகாந்த் - சினேகா நடிப்பில் வெளியான போஸ் படத்தில் நிஜமா நிஜமா பாடலில், ‘மழை நின்ற போதும் மரக்கிளை தூருதே’ என்கிற வரிகளை எழுதி இருப்பர் நா. முத்துகுமார்.