cinema
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவும், கதாநாயகியாகவும் அதிகம் ரசிக்க பட்டவர் நடிகை மீனா.
மகளாக நடித்த நடிக்கருகே, ஹீரோயினாக நடித்ததால் ஆரம்ப காலத்தில் சில சர்ச்சைகளுக்கும் ஆளானவர்.
ஆனால் ரஜினி - மீனா காம்போவில் வெளியான அத்தனை படங்களுக்கும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
ரஜினியை தவிர, கமல், அஜித், அர்ஜுன், சத்யராஜ், சரத்குமார் என தமிழ் திரையுலகில் இருந்த பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.
தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்த போதும் சில காரணங்களால் அந்த படங்களில் நடிக்க முடியாமல் போனது.
இதை தொடர்ந்து, ஷாஜகான் படத்தில் இடம்பெற்ற சரக்கு வச்சிருக்கேன்.. இறக்கி வச்சிருக்கேன் என்கிற ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடினார்.
சினிமாவில் மார்க்கெட் குறைந்த பின்னர் சினிமாவில் மார்க்கெட் குறைந்த பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன மீனா, அவ்வப்போது சில படங்களில் தலை காட்டி வந்தார்.
இவரை தொடர்ந்து இவரின் மகள் நைனிகாவும் தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
கணவர் மறைவுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ள மீனா அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் பட்டு புடவையில் பேரழகியாய் ஜொலிக்கும் போட்டோஸ், 48 வயதிலும் இவ்வளவு அழகா என ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.