Tamil

25 வருடத்தில் பாலா இயக்கியது 10 படங்கள்:

Tamil

சேது:

1999 ஆம் ஆண்டு விக்ரமை வைத்து இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம். தேசிய விருதை வென்று சாதனை செய்தது.

Image credits: our own
Tamil

நந்தா:

2001 ஆம் ஆண்டு, நடிகர் சூர்யாவை வைத்து பாலா இயக்கிய இந்த திரைப்படம், நடிகர் சூர்யாவின் திரையுலக வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது.

Image credits: our own
Tamil

பிதாமகன்:

சூர்யா மற்றும் விக்ரமை சேர்த்து வைத்து 2003 ஆம் ஆண்டு இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி இருந்தார். இப்படத்திற்காக சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த நடிகருக்கான விருதுகள் கிடைத்தது.
 

Image credits: our own
Tamil

நான் கடவுள்:

தேசிய விருதை வென்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்று. 2009 ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை வைத்து இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி இருந்தார்.

Image credits: our own
Tamil

அவன் இவன்:

ஆரியா மற்றும் விஷால் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டை குவித்தது.

Image credits: our own
Tamil

பரதேசி:

பாலா மிகவும் தனித்துவமான கதைக்களத்தில் இயக்கி - தயாரித்திருந்த திரைப்படம் 'பரதேசி'. அதர்வா ஹீரோவாக நடித்த இந்த படம் 2013-ஆம் ஆண்டு வெளியானது.

Image credits: our own
Tamil

தாரை தப்பட்டை:

 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், இசைஞானி இளையராஜாவுக்கு பேசிய விருதை பெற்று தந்தது. இந்த படத்தில் சசிகுமாரை கதாநாயகனாக வைத்தும் இயக்கி இருந்தார் பாலா.

Image credits: our own
Tamil

நாச்சியார்:

ஜோதிகா, ஜிவி பிரகாஷ், இவனா நடிப்பில் வெளியான இந்த படத்தை, இயக்குனர் பாலா இயக்கி தயாரித்திருந்தார். இப்படமும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது.

Image credits: our own
Tamil

வர்மா:

விக்ரமின் மகன் துரு விக்ரமை வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆக இயக்குனர் பாலா இயக்கிய  இந்த படம் 2020-ல் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

Image credits: our own
Tamil

வணங்கான்:

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் வணங்கான். இந்த படத்தை நடிகர் அருண் விஜயை வைத்து பாலா இயக்கி உள்ளார். இது இவர் இயக்கிய 10-ஆவது திரைப்படம்.
 

Image credits: our own

TRP-யில் யார் கெத்து? இந்த வார டாப் 10 தமிழ் சீரியல் லிஸ்ட் வந்தாச்சு

கீர்த்தி சுரேஷ் செய்த வேலையால் நயன்தாராவுக்கு விழும் தர்ம அடி!

நிறங்கள் மூன்று முதல் சாமானியன் வரை! டிசம்பர் 20 OTT ரிலீஸ்!

தியேட்டரா? ஓடிடியா? இந்தியன் 3 ரிலீஸ் குறித்து மனம்திறந்த ஷங்கர்