தென்னிந்திய திரையுலகில், நம்பர் 1 நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா, கோலிவுட் திரையுலக ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாடப்படுவபர். இந்த நிலையில், இந்த மாதம் இவர் வெளியிட்ட அறிக்கையில், இனிமேல் தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். அதோடு தனது பெயர் தான் தனக்கான அடையாளம். அதனால், தன்னை நயன்தாரா என்று அழைத்தாலே போதும் என்று கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
குஷ்புவின் கருத்து
குறிப்பாக நடிகை குஷ்பு, சூப்பர்ஸ்டார் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே எனவே நயன்தாராவின் முடிவு வரவேற்க தக்கது என்பது போல் கூற, லாரன்ஸ் உள்ளிட்ட சில பிரபலங்கள்.... நயன்தாராவும் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக பல சாதனைகளை செய்துள்ளார். எனவே அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில் தவறில்லை. அதே நேரம் அவரின் விருப்பமும் மிகவும் முக்கியம் என கூறி இருந்தனர்.
சின்னத்திரை நயன்தாரா என அழைக்க வேண்டாம்
நயன்தாராவின் இந்த முடிவுக்கு காரணம், சில விமர்சகர்களின் விமர்சனம் என்றே கூறப்பட்டது. இது ஒருபுறம் இருக்க.... தற்போது சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் பிரபலம் ஆகி, தன்னுடைய திறமையால், பட்டிமன்ற பேச்சாளர், காமெடி நடிகை, மற்றும் தொகுப்பாளர் என பன்முக திறமையாளராக இருக்கும் அறந்தாங்கி நிஷா, தன்னை ரசிகர்கள் யாரும் சின்னத்திரை நயன்தாரா என அழைக்க வேண்டாம் என கூறியுள்ளார். இவரின் இந்த முடிவுக்கு காரணம், நயன்தாரா எடுத்து முடிவு தான் என கூறப்படுகிறது.
Aranthangi Nisha : தமிழ் புத்தாண்டன்று புது பிசினஸ் தொடங்கிய அறந்தாங்கி நிஷா - குவியும் வாழ்த்துக்கள்
பட்டங்களை புறக்கணிக்கும் பிரபலங்கள்:
சமீப காலமாகவே பிரபலங்கள் பலர் தங்களுக்கான பட்டங்களை புறக்கணித்து வருகிறார்கள். அந்த வங்கியில் அஜித் குமார். தன்னை தல என்று அழைக்க வேண்டாம். ஏகே அல்லது அஜித் குமார் என்று அழைத்தால் போதும் என்று கூறியிருந்தார். அதே போன்று கமல் ஹாசனும் உலக நாயகன் என்ற பட்டம் வேண்டாம் என்று கூறியிருந்தார். இவர்களது வரிசையில் சமீபத்தில் நயன்தாராவும் இணைந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.