நெருங்கும் பொங்கல் பண்டிகை… திண்டுக்கல்லில் பானை செய்யும் பணிகள் தீவிரம்!!

Jan 8, 2023, 8:47 PM IST

பொங்கல் பண்டிகை முன்னிட்டு திண்டுக்கல் பானை தயாரிக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழர் திருவிழா எனப்படும் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டியில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாடு, தமிழகம் வேறுபாடு கிடையாது.! பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்? திருமாவளவன் விளக்கம்

தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மண்ணை எடுத்து வந்து அதை பக்குவமாக காய வைத்து பிறகு பிசைந்து ஊற வைத்து பின்னர் தண்ணீர் ஊற்றி குழைத்து வைக்கப்படுகிறது. பின்னர் அதனை திருவை என்று கூறப்படும் மண்பானை செய்யும் எந்திரத்தில் வைத்து சுற்றி அதிலிருந்து மண் பானை வடிவமைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: சிலம்பம் சுற்றி அசத்திய அமைச்சர் செஞ்சி மஸ்தான்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

வடிவமைக்கப்பட்ட பானை சுமார் மூன்று மணி நேரம் நிழலில் காயவைத்து சூளையில் அடுக்கி சுடப்பட்டு மண்பானைகள் தயாரிக்கப்படுகிறது. பின்னர் அதனை அலங்கரிக்கும் வகையில் வண்ணம் தீட்டி விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுவதோடு கரூர், தேனி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட உள் மாநிலங்களுக்கும் கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.